சனி, 11 மார்ச், 2023

அருணகிரியார்

 அருணகிரியார்

திருவெங்கட்டார் முத்தம்மை
இருவரின் இனியமகனார்
இளமையில் கல்விகற்று
இலக்கிய இலக்கணத்தில்
தேர்ந்தவர் ஆனாலும்
சிற்றின்பச் சேற்றில்
சிதைந்து சீரழிந்து
சிறுமைப் பட்டுப்போனார்
கட்டிய மனைவியும்
கட்டிலுக்கு மறுத்துரைக்க
தமக்கையும் திட்டிஒதுக்க
வீட்டைவிட்டு வெளியேறினார்
புறம்பான செய்கை
புரையோடிய புண்ணாய்
போனதால் பூவுலகில்
பழிதவிர்த்து வாழ்வதெப்படி
குழப்பத்திலும் கவலையிலும்
கோவிலேறி உயிரை
மாய்த்துக்கொள்ள முனைகையில்
குமரன் கையேந்திக்கொண்டார்
ஆறுவிரல் கொண்டதனால்
ஆறுதலைகளும் சரவணபவஎனும்
ஆறெழுத்து மந்திரத்தை
நினைவு றுத்துகிறதோ
முத்தைத்தரு பத்தித்திரு நகை
முதலடியை எடுத்துக்கொடுக்க
சந்தக் கல்வியால்
சிந்து பாடினார்
திருப்புகழ் கந்தலங்காரம்
கந்தர்அனுபூதி கந்தர்அந்தாதிஎன
பத்துவகை அலங்காரம்
அத்தனையும் தந்தோன்
இறையருள் பெற்று
ஈசன்கண் ஓன்றி
நிறைபொருளாய் ஆனார்
அழியும் உடல்விட்டு
அழியாப் புகழ்பெற்றார்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக