காணிநிலம் வேண்டாம்
காணிநிலம் வேண்டாம்
நாணியே சொல்கிறேன்
விவசாயம் தெரியாதெனக்கு
கூரான எழுதுகோல்கொடு
குற்றம் செய்வோரை
கூறு போட்டு எழுத்தால் மாறச்செய்
மோசம்செய்வோரை
மோதி மிதித்திட
பலத்தைத் தந்திடு
வழக்கின்றி வாழ்க்கை
வளம் பெறச்செய்ய
பொய்க்காமல் வாழ
மெய்க்காவலாய் இருந்திடு
எடுத்த பிறவியை
இனிதுறச் செய்யவும்
உலகிடை மாந்தர்
நலமுடன் வாழவும்
உவந்ததைச் செய்து
உவப்புடன் வாழவும்
நல்லதோர் நட்பாலே
வல்லமை அடையவும்
வாழ்த்தி வரம்கொடு
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக