வெள்ளி, 10 மார்ச், 2023

சிறு விளையாட்டி

 சிறு விளையாட்டி

பாற்சோறும் பழமும் புகட்டச் சென்றால்
பருகாமல் பாடாய்ப் படுத்தி அங்குமிங்கும்
அரிதாய்ப் பெரிதாய் அமைத்துச் சமைத்ததை
அடம்பிடித்து உண்ணாமல் ஓடும் அவளை
ஓடியும் ஆடியும் ஒளிந்தும் கிடந்து
வேடிக்கை காட்டும் விஷமக் காரியை
அதட்டியும் உருட்டியும் மிரட்டியும் பார்த்து
அலுக்காமல் சலிக்காமல் ஆட்டம் காட்டிய
செல்வமகள் நிலையை செவிலித்தாய் உரைக்கிறாள்
சிறுவிளையாட்டியாய் இருந்தவள் மாறியது எப்படி
பொறுப்புடன் நின்றாள் வறுமையை மறைக்க
புரிந்திட வைத்தும் புகட்டியதும் யார்
சேய்குணம் நீங்கி செம்மனம் ஓங்கியதே
விருப்பு வெறுப்பிவ் விரண்டும் இல்லாமல்
இருப்பதைக் கொண்டு நிறைவாய் வாழும்
கலையைக் கற்றுத் தந்தது யரோ
பெற்றவர் உதவியையும் மறுக்கிறாள் மாண்புடன்
கண்ணீர் விடுதலும் கவலையும் வேண்டாம்
கணவனின் வருவாயில் கண்ணியமாய் வாழ்கிறாள்
எண்ணத்தில் உயர்ந்து ஏழ்மையையே மறைக்கின்றாள்
சின்னவளல்ல குடும்பத்தைக் காக்கும் குலமகளானாள்
செவிலியின் செவியுரை கேட்ட நற்றாய்
வியந்தே ஆனந்தக் கண்ணீர் விட்டாள்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக