வெள்ளி, 10 மார்ச், 2023

வாழ்வு நிலையாமை

 வாழ்வு நிலையாமை

****"*******************
பொருளே பெரிதெனப்
போற்றுங் கொடுமை
பொருளைப் பொருளெனப்
போற்றா மடமை
செல்வச் செருக்கி
னுயர்மனப் பான்மை
எல்லாம் சதமென
இறுமாப்பு வேண்டாம்
நீர்க்குமிழி போன்றே
வாழ்க்கையும் நிமிடத்தில்
மறையும்
அலையும் நீர் மேவும்
குமிழாதல் போல்
அரசபோகமும் வைபோகமும்
ஒருநாள் அழியும்
உண்மை அறியாது
உலகம் புரியாது
மனிதன் நினைக்கிறான்
வாழ்வு நிலைக்குமென்று
அன்புடை உறவும்பொன்பொருள் யாக்கை
போற்றிட அதுவும்
நிலைப்பது இல்லை
வந்தவர் யாரும் நிலைத்ததும் இல்லை
உள்பொருள் உணர்ந்து
உரியன செய்து
நல்லன செய்க
நாளை பார்ப்போம்
என்று எதையும்
தள்ளிப்போடாதே
நாளை நீ இருப்பதும்
நிச்சயமில்லை
மனதில் நிலையாமை
நிறுத்தி இருக்கும் வரை
சிறப்பாய் வாழ்வோம்
சரஸ்வதிராசேந்தின்
செல்வா ஆறுமுகம்
Saraswathi Rajendran
அன்புடை உறவும்
பொன்பொருள் யாக்கை
போற்றிட அதுவும்
நிலைப்பது இல்லை...
பொன்பொருள் யாக்கை - எங்க புடிச்சிங்க இந்த வரியை.
அருமை கவிஞரே...
உள்பொருள் உணர்ந்து
உரியன செய்து
நல்லன செய்க
நாளை பார்ப்போம்
என்று எதையும்
தள்ளிப்போடாதே
நாளை நீ இருப்பதும்
நிச்சயமில்லை.
நல்லதோ..கெட்டதோ...
இப்பவே செஞ்சிரு - அதானே..
ஆமா ஆமா...
பணம் பணம்னு சேர்த்து வெச்சிக்கிறோம்
ஒரே ராத்திரியிலே செல்லாதுன்னு சொல்லிடலையா...?
எதுவும் நிரந்தரமில்லைதான்.
என்ன பண்றது...
வாழ்ந்துதான் ஆகணும்.
கவிதை சிறப்பு கவிஞரே.
வாழ்த்துகள்.
May be an image of text that says 'Θευη . நிலாச்சோறு முகநூல் குழுமம் சான்றிதழ் ------------- முத்து மூன்று வைரம் ஐந்து 9 தலைப்பு வாழ்வு நிலையாமை வெற்றியாளர் நடவர் มนทดแกไิชิมม கவிஞர். ஞர். கவி செல்வா அறுமுகம் சரஸ்வதி ராஜேந்திரன் நாள்.. 23/07/22 முதல் 28 28/07/22 07 வரை திகയ ဝါစာေ် mnnCarsAg'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக