கண்ணின் துனித்தே
கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று
***********************************
துணையாய் இணைத்தே
இணைத்துப் பிணைத்தே
இன்பமும் தந்தவன்
இன்னலைத் தவிர்க்க
பொருள்தனை மீட்கவே
புறப்பட்டுச் சென்றவன்
நிறை பொருளுடன்
விரைவில் வருவானென
தவித்து நின்றவள்
தணியாத கோபம்
கொண்டாள் கோதை
அவன் வருகின்ற
இனிமைச் செய்தியை
செவியில் கேட்டவள்
எழிலாய் தன்னை
திருத்தி அமைத்தாள்
கண்ணுக்கு மையெழுதி
கரங்களில் வளையலேந்தி
களிப்பு மிகுந்தாள்
வருத்தமும் சினமும்
விழிகளில் விளைந்தாலும்
வந்தவனை விரைந்தே
அவனுக்கு முன்னே
ஆரத்தழுவி முத்தம்
பந்தாட சித்தம்
சூடேறினாள் பேதை
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக