வெள்ளி, 10 ஜனவரி, 2014

--இன்றைய சினிமாவின் போக்கும் ,சமுக பாதிப்புகளும்

                                             தைப் பொங்கல் சிறப்பு கட்டுரை  --இன்றைய சினிமாவின் போக்கும் ,சமுக பாதிப்புகளும்
 இன்றைய  திரைப் படங்களில்  நல்ல கதை கிடையாது ,நல்ல கருத்து கிடையாது ,ஏன் பாடல்கள் ,வசனங்கள்  கிடையாது ,ஒரு தலைப்பு கூட கிடையாது ,,நகைச்சுவை  என்ற பெயரில் அடிக்கிற கூத்து களை  சொல்லவே  வேண்டாம் , இலை மறை காயாக  காட்டப்பட்ட விஷயங்கள் எல்லாம் அம்பலத்தில்  ஏறி  பார்ப்பவர்களை அருவருக்க வைக்கிறது,இன்று குடும்பத்தோடு  அமர்ந்து சினிமாவை பார்க்கமுடிவதில்லை ,
சினிமாவினால் ஏற்படும் பாதிப்புகள் ;;
இன்றைய சினிமாவின் தலைப்புகளே  வன்முறையை   தூண்டுவதாக உள்ளது ,பெயருக்குகூட பஞ்சம் ,குஸ்தி , தகராறு ,வீராப்பு , குத்து ,ரகளை , அடிதடி  இப்படி வைத்தால்...பாதிப்பு என்பது  உயிர்களோடு மட்டும் சம்பத்தப்பட்டது  அல்ல ,அது மிக நுட்பமான விஷயங்களோடும் சம்பந்தப்பட்டது ,இது போன்ற படங்கள்  எதிர் மறையான அதிர்வுகளை தந்து  இளைய தலை முறைகளை  வன்முறைக்கு    தூண்டுகிறது ,நல்ல விஷயங்களை சிதைத்து  சுயநலத்தை  வளர்க்கிறது . ,காதல் என்றால் பெற்றோர்களை  எதிர்த்து ,வீட்டைவிட்டு  ஓடுவதாக காட்டுகிறார்கள் ,காதல் திருமணத்தின்  பின் விளைவுகளை   சினிமாவில் காட்டுவதில்லை , எதற் கெடுத்தாலும்  அடிதடி ,வன்முறை  என்று காட்டுவதால் தங்களை தாங்களே ஹீரோவாக  காட்டிக்கொள்ள இளைஞர் கள்  அதைப்பார்த்து  அவர்களும்  வன்முறையில் ஈடு படுகிறார்கள்  இரட்டை அர்த்த  வசனங்களும், நாராசமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை  பழிக்குப் பழி , ,வெட்டு  கொலை என்று மாணவ சமுதாயமும்   கெட்டுப்போகின்றன ,ஆகவே  படைப்பாளிகளும் ,இயக்குனர்களும்  முழுமையான ஆரோக்கியமான படங்களைத் தரவேண்டும் ,மனித நேயப் பண்புகளையும் .பரந்த மனப்பான்மையையும்   கூடிய படங்களை உருவாக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம் ,, இன்றைய குழ்ந்தை கள் கூட   மனபாதிப்பு அடைகின்றனர் , பாதிப்புகள் நீங்க வேண்டுமானால்   வன்முறை காட்சிகளும் ,,ஆபாச காட்சிகளும்
நிறுத்தப்படவேண்டும் 

சனி, 4 ஜனவரி, 2014

இணையத்தின் சமூகப் பயன்பாடு


                        இணையத்தின்  சமூக பயன்பாடு

  ணையம் என்றால் இணைந்து என்று பொருள்  , இன்று சமூகத்தில்  இதன் பயன் பாடு  கல்வி, வணிகம்   இப்படி எத்தனையோ வடிவங்களில் பயன் தந்து கொண்டிருக்கிற்து  .தமிழில் உள்ள வளங்கள்  யாவும்  மின்வடிவில்  ்சேகரிக்கப்படுவதின்     மூலமாக  எதிர் கால  தலைமுறை யினருக்கு   ்தொண்டாற்றுகிறது , வணிக ரீதியாக  ணையத்தினை  பயன்படுத்தி  லாபம் ஈட்டமுடிகிறது .வீட்டிலிருந்தபடியே  மின் கட்டணம்  ரயில் ,பஸ் டிக்கெட்  ,செல்போன் சார்ஜ் பண்ண என்று எல்லாவற்றையும்  எளிதாக  செய்ய முடிகிறது , யார்  வேண்டுமானாலும்  இதில் எழுதலாம் . நாமே அதை வெளியிடலாம் ,அதற்கான விமர்சனங் களையும் பெறலாம்  ணையதளத்தில்   சமூக நிகழ்வுகள் 
இதில்  முக்கியப்படுத்தப்படுகிறது ,பிரபல எழுத்தாளர்களுடைய  படைப்புகளும்  ணையத்தில்  மின் நூல்களாக  கிடைக்கின்றன  மறந்து போன  தோ  ஒரு வரியின்  ஒரு வாக்கியத்தை    விட்டால் கதை தொகுப்பையும் முன் நிறுத்தும்  இன்று அரசியல்  கட்சிகள்  தேர்தலுக்குக்கூட  ணையத்தை பிரச்சாரத்துக்கு  பயன் படுத்துகிறார்கள்  இது மட்டுமா ? எந்த கணக்கையும் எளிதாக போட்டு காண்பிக்கிறது  பாரன் ஹீட்டை செல்சியலில் ,மைல்களை  கிலோ மீட்டரில்  மாற்றிகொடுக்கிறது . எந்த    நாட்டின் கரன்சியையும்  இன்னொரு நாட்டின்  கரன்சி மதிப்பில் சொல்லித்தருகிறது ,எந்த ஊரின்  சீதோண   நிலையையும் சட்டென்று சொல்லும் , பார்சல்களின் பயண நிலையைக் கூட  இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ளமுடியும் . ஒரு சொல்லின் பொருளை,அதன் உச்சரிப்பை  சொல்லி கொடுக்கிறது .
இப்படியாக  ணையத்தின் பயன் பாட்டினால்  மக்களின்  நேரத்தையும் ,பணத்தியும்  மிச்சப்படுத்துகிறது   ணையத்தால்   வருங் காலத்தில் இன்னும் கூட  நிறைய பயன்பாடுகள்  கிடைக்கலாம் ,ணையமே உனக்கு நிகரில்லை  சமூகத்தில் உன் துணை ஒன்று போதும்  மனிதனுக்கு