தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
கூரிய நுனியுடைய கூர்அரும்பு பூத்திருக்க
கரியபெரிய கொம்புடைய இரலை மான்கள்
பரற்கற்கள் நிறைந்த பள்ளங்களில் துள்ளியாட
கார்கால மழையில் கானகம் கவின்பெற
பொருள் தேட சென்றவன் தலைவியைக்காண
தேரில் விரைய தலைவனின் மனவேகமறிந்த
பிடரிமயிர் கொண்ட குதிரை விரைந்தது
காட்டு வழிதனில் கடந்திடும் தேரினில்
பூட்டிய மணிகளின் அதிரும் ஓசையை
கேட்டுப் பதறிய பறவைகளின் துன்பம்பார்த்து
வாட்டம் போக்க மணியின் நாக்கைக்கட்டி
பறவைகளுக்கேத் தீங்கு நினைக்காதவன்
பாவைக்கு தீமை செய்வானா
தேவியைப் பார்க்க தலைவன் வந்தான்
சரஸ்வதிராசேந்திரன்
Boost this post to reach up to 408 more people if you spend ₹578.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக