ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

பொன்மனம் --தினத்தந்தி --குடும்பமலர்--12-3-1995

அம்மாவின் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்தான் ஈஸ்வரன் .
"ஜாதகம் பொருந்திருப்பதாக பெண் வீட்டவர்கள் சொல்கிறார்கள் .பெண்ணை பெற்றவர் அமெரிக்காவில் பெரிய வேலையில்இருக்கிறார் பெண் சென்னை கல்லூரியில் பி ஏ ,படித்தவள் .பாடத்தெரியும்
.பரத நாட்டியம் அரங்கேற்றம் கூட ஆகிவிட்டது .வீட்டு வேலைகள் கூட திறமையாக செய்வாளாம் .ஏகப்பட்ட சொத்துக்கள் வேறு மூத்த மாப்பிள்ளை பிரபலமான டாக்டர் .சென்னையில் வாரி கொட்டுகிரானாம் .பரம்பரை பணக்காரக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்து பெண்ணை பார்த்து விட்டு பீறகு .. பேசு .... .தாமதிக்காமல் உடனடியாக ,புறப்பட்டு வா ..."
அவனுள் உற்சாகம் பெருக்கெடுத்துகொண்டிருந்தது .அவன் எண்ணியபடியே அந்தஸ்து உள்ள குடும்பம் .கசக்கவா செய்யும் ? அந்தஸ்து மோகம் அவனுக்கு ஏற்பட காரணம் இருந்தது . பள்ளிக்கூட
நாட்களில் அவன் தோழர்கள் யாவரும் பெரிய இடத்து பிள்ளைகளாக இருந்தனர் .அவர்களது பேச்சுக்கள் ,கார் ,பங்களா ,வெளிநாட்டு பயணம் என்ற பெரிய அளவிலே எழும்போதெல்லாம் தூங்காமல்
தன ஏழ்மையை எண்ணி உள்ளூர புழுங்குவான் . அந்த புழுக்கம்தான் வைராக்கியமாக மாறி அயராது உழைத்து வயிறைஒடுக்கி ,வாயைக்கட்டி ,வளர்ந்து தன அந்தஸ்தை மேம்பட செய்துகொண்டான் .அடி மட்டத்திலிருந்து வந்தவன்தான் .ஆனாலும் அந்தஸ்து மிக்க இடத்தில்தான் பெண் எடுப்பேன் .அழகு ,படிப்பு ,அந்தஸ்த்தில் அவள் ஒரு பிரபலமானவரின் மகளாக இருப்பவைளைத்தான் திருமணம் முடிப்பேன் என்ற குறிக்கோளை கொண்டிருந்தான் . அதனால்தான் ஐ ந்து வருடங்களாக வந்த வரன்களைஎல்லாம்தட்டிக்கழித்துக்கொண்டிருந்தான் ..
இன்று அம்மா எழுதிய இந்த வரன் அவன் இஷ்டப்படி இருந்ததால்தான் உற்சாகம் கரைபுரண்டோடியது .தாமதிக்காமல் உடனே புறப்பட்டான் .ஹம்மிங்கில் பாடியவாறே காரோட்டி வந்துகொண்டிருந்தான் ..அவன் சிந்தனை வேகத்துக்கு ஈடு கொடுத்து கார் பறந்தது .ஊர் எல்லை வந்ததும் வேகத்தை அதிகபடுத்தினான் ஈஸ்வரன் .
அந்த நேரம் பார்த்தா ..அந்தப்பெண் அவசரமாக தெருவை கடக்கவேண்டும் ,கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணை தூக்கி எரிந்தது கார் .திடுக்கிட்டு போய்பிரேக்கை அழுத்தினான் .கும்பல் கூடிவிட்டது .ரத்தக்காயத்தில் கிழேகிடந்தாள்அந்தப்பெண் .ஒரு அனம் நிலை தடுமாறினாலும் ,மறுகணம் மற்றவர்களின் உதவியோடு வாரி காரில் போட்டுக்கொண்டு ஆஸ்பிடலை நோக்கி போனான் .
விவரம் அறிந்து பெண்னைப்பெற்றவர்கள் ஓடி வந்தனர் .
"அடப்பாவி ,பணமும் ,காசும் இருந்துட்டா இப்படியா கண்மண் தெரியாமல் கார் ஓட்டறது .என் பெண்ணோட எதிர்காலத்தையே சிதைச்சுட்டியே ,நல்லாஇருக்கிறப்பவே கல்யாணம் நடக்கிறது கஷ்டம் .இப்ப சிதைஞ்சு போயிட்ட முகத்தை பார்த்து யாரு இவளை கட்டிப்பா ,உன்னை தெய்வம்கூட மன்னிக்காது , உ ருப்பிடுவாயா ? "மங்களம் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.அவளை
அடக்கினார் வைத்தியநாதன் "இது ஆஸ்பிடல் கொஞ்சம் சும்மா இருக்கியா?நம்மவிதிக்கு ஏன் அவரை திட்டறே ? அடிச்சுபோட்டுட்டு ஓடாம,மனிதாபிமானத்தோடு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தாரே அதுவே பெரிய காரியம் ,.ரொம்ப நன்றி தம்பி "
"சார் என்னை நல்லாதிட்டடும் ,தவறு என் பேரிலேதான் என்னாலதான் உங்க மகளுக்கு இப்படியொரு ஆபத்து வந்தது பிளீஸ் ,என்னை ம ன்னி ச்சுக்குங்க சார் ,வைத்திய செலவை நானே
ஏற்றுகொள்கிறேன் "ஈஸ்வரன் கண்கலங்கினான் . ஈஸ்வரன் சொன்னபடி வைத்திய செலவை ஏற்றுக்கொண்டான் ,இருப்பினும் அவன் மனம் அமைதியடைய வில்லை .தினமும் ஒரு முறை
அவளை போய்பார்த்து ,டாக்டரிடமும் நன்கு கவனிக்கச்சொல்லிவிட்டு வந்தான் . இது அவன் அம்மாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது
"ஈஸ்வரா ,அவளோட விதிக்கு நீ என்ன செய்வே ?நீஏற்படுத்திய ஆபத்துக்கு ஈடாகத்தான் காசை கொட்டி வைத்தியமும் செஞ்சுட்டே பின் ஏன் அதையே நினைச்சு மறுகிகிட்டு,போப்பா ,
நான் சொன்ன பெண்ணை பார்க்க கிளம்பு .அவங்களும் எத்தனை நாள் பொறுப்பாங்க?வருகிற தையிலே கல்யாணத்தை முடிச்சிடலாம் "
அம்மா அவசரப்படாதே இன்னும் ஒரு வாரம் டயம் கொடு ,அதுவரை தொணதொணக்காதே "என்று கூறி விட்டு எழுந்து போனான் .அவன் விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவே இல்லை
அந்தப்பெண்ணின் தை கதறிய கதறல்தான் நினைவிலேயே நின்றது .அவள் சொன்னதுபோல் நன்றாக உள்ள பெண்களுக்கே திருமணம் நடப்பது கஷ்டம் அதுவும் கோரமான முகத்தை அடைந்து
விட்ட அவளை யார் திருமணம் செய்துகொள்வார்கள் ?அதுவும் ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணை ?மனசாட்சி உறுத்தியது .நிறைய யோசித்தான் நிறைய வருத்தப்பட்டான் .பின் ஒரு முடிவோடு
எழுந்தான் தன்னால் உருவான பிரச்னைக்கு தானே தெளிவு தர வேண்டும் என்ற முடிவோடு .
"அம்மா என்னாலேதானே உங்க பெண்ணுக்கு இந்த நிலைமை உங்க பெண்ணுக்கு நானே வாழ்க்கை தர முடிவு பண்ணிட்டேன் உங்களுக்கு சம்மதம்தானே ?
"தம்பி ,நீங்க அவசரப்பட்டு மூவு எடுக்காதீங்க ?"வைத்தியநாதன் படபடத்தார் .அதற்குள் அந்தப்பெண் குறுக்கிட்டாள். "அப்பா கட்டு பிரிக்காத இந்த நிலையிலே என் முகம் எப்படி இருக்கும்னு எனக்கே தெரியாது ,ஒரு வேளைமற்றவர்கள் பார்த்து அறுவெருக்கிறநிலையிலென் முகம் இருந்திட்டா .....யாரும் பிராயச்சித்தம் செயுறேன்னு உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டு பின்னாலே தானும் நிம்மதி இழந்துட்டு ,என் நிம்மதியையும் சீரழிக்கவேண்டாம் இதுவரை செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லி அனுப்புங்கப்பா "
"இல்லே லீலா ,முகத்தை பார்க்கவேண்டிய அவசியம் எனக்கில்லே .கட்டு பிரிச்சதும் நீ அழகா இருந்திட்டா இந்த அழகுக்காகத்தானே ஆசைபட்டேன்னு என் மனசாட்சி உறுத்தும் ,நேர் மாறா ஆயிட்டா
நான் அனுதாபத்தாலேதான் கல்யாணம் பண்ணிகிட்டதா உன் மனசாட்சி உறுத்தும் அதனாலே கட்டு பிரிக்காதைந்த நிலையிலேயே உன்னை நான் திருமணம் செய்துகொள்வதாக வாக்கு தருகிறேன் இப்படி செய்வதால் என்னை நீ தியாகியாக கருத வேண்டாம் .உன்னை கடைசிவரை மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்வேன் இது என்தைமேல் ஆணை "சொல்லிவிட்டு வெளி நடந்தான் .இப்போது
அவன் மனம் தெளிவுடனும் ,அமைதியுடனும் காணப்பட்டது
தினத்தந்தி குடும்பமலர் 12 --3--1995

பணமா ,பாசமா ? --தேவி---2-11-1994

விடுமுறை நாளானதால் சோம்பலாக எழுந்து ,ஷேவிங் செய்தவாறே , அந்த விஷயத்தை சுவாரசியம் இல்லாதவனைப்போல் ஆரம்பித்தான் ,வசந்த் .
"சுசி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?" அறையை சுத்தம் செய்ய தொடங்கி இருந்தாள்சுசீலா "அப்படி என்ன விஷயம் ?'
"உங்கப்பா ...உங்க வீட்டை உன் தம்பியின் பேருக்கே எழுதப்போறாராம்.,நியாயம்தானே ?"
"இந்த விஷயம், எனக்கே த்தெரியாதே ,அப்பா இதை ஏன் மறைக்கணும் ?"
"பைத்தியம் ,இதிலே மறைக்க என்ன இருக்கிறது ?எழுதிட்டு சொல்லலாம்னு இருந்திருப்பார் .அதோட சொந்த தம்பிக்குத்தானே ,நீ வேண்டாம்னா சொல்லுவேன்னு நினைத்திருப்பார் நல்லவனைப்போல் நடித்தான் வசந்த் .அவனுக்கு மனைவி சுசீலாவின் குணம் அத்துப்படி ..ஒன்றை அவனே வேண்டும் என்று சொன்னால் அது வேண்டாம் என்பாள் .நியாயம் என்று இவன் சொன்னால் இல்லை அநியாயம் என்று எதிர்வாதம் செய்வாள் .குழந்தை பருவத்திலேயே அவளிடம் இந்தகுணம் ஊறி வளர்ந்திருந்தது .வசந்த் ,மாமனார் வீட்டில் தனக்கும் பங்கு வேண்டுமென்று
நினைத்தாலும் தன விருப்பத்தை வெளிப்படையாகச்சொன்னால் ,சுசீலா எதிர் மறையாகிவிடுவாள் என்பதால் மறைமுகமாக அவளை சீண்டினான் . அவன் நோக்கம் நிறைவேறியது .
"என்ன அநியாயம் இது ?அவ்வளவு பெரிய வீடு ,எனக்குப்பிறகு வந்த பயலுக்கு போறதா ?அப்பா என்னதான் நினைக்கிறார் ?பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டுன்னு தெரியாதா ?இல்லே நான் ஏமாளியா வாயை மூடிட்டுஇருப்பேன்னு நினைச்சுட்டாரா ?"
"அவ்ருக்குத்தெரியாமல்இல்லை சுசி உனக்குத்தான் சீர் ,செனத்தி எல்லாம் குறைவில்லாமல் செய்து கல்யாணம் செய்து விட்டோமே ,முரளிக்கு இந்த வீட்டையாவது எழுதி வைப்போமே என்று '
நினைத்திருப்பார் "நன்றாக ஸ்க்ரு கொடுத்தான் .
'ஏன் எனக்குமட்டும்தான் செலவு செய்தாரா ?தம்பி படிக்க ஆனா செலவும்,என் கல்யாண செலவை விட அதிகம் தெரியுமா ?அதென்ன மொட்டை கணக்கு ?விட்டை விற்றுவிட்டு அதில் பாதியை
எனக்கு கொடுக்கிறதுதானே நியாயம் ?இல்லே வீடு அவனுக்கு வேணுமின்னா எனக்குச்சேர வேண்டிய தொகையை கொடுத்திட வேண்டியதுதானே?''"
"நீ சொல்றது என்க்குஒன்றும் நியாயமாகத்தெரியலே.முரளி யாரு ,உன் தம்பிதானே ,அவன் நல்லைருந்துட்டு போகட்டுமே ,விட்டு கொடுத்துவிடு சுசீலா "
"அப்ப ,என்னை ஏமாளியா நிற்கச் சொல்றீங்களா ?நமக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கு .எதிர் காலத்தை நினைச்சா பயமா இருக்கு ,விலை வாசியோ குடும்பம் நடத்தவே முடியலே .ஏங்க
உங்களுக்கு யாரு சொன்னா ?'
"வீடு எழுதி வைக்கிற விஷயமா ?உங்க வக்கீலை வழியிலே பார்த்தேன் ,அவர்தான் சொன்னார் "
'"நீங்க ஒண்ணுமே சொல்லலையா?."
"இது உங்க குடும்ப விவகாரம் ,நான் ஏன் தலையிடனும்னு வந்துட்டேன் ".
"அப்பா அப்படி செஞ்சாருன்னா வேற வக்கீலை பிடிச்சு நோட்டீஸ் விடவேண்டியதுதான் "என்றாள்ஆங்காரமாக சுசி
"நோட்டீஸ் விட்டின்னா முரளி காம்ப்ரமைஸ் பண்ணிவிடுவான் .உனக்கு இரண்டு லட்சம் பணம் கொடுத்துடறேன்னு .அப்ப நீ என்ன செய்ய முடியும் "விஷமத்தோடு சொன்னான் வசந்த்
"ஏங்க ,நான் என்ன முட்டாளா ?அவ்வளவு பெரிய வீட்டுக்கு இரண்டு லட்சம்தான் விலையா ?என்னைக்கு மார்கெட் விலை என்ன?அதைபோட்டுல்லஅதிலே பாதி தரணும்,சும்மா ஒப்புக்கு
எதையாவது கொடுத்தா ஏமாந்துடுவேனா என்ன ?பார்க்கிறேன் ஒருகை "."
"இதைப்பாரும்மா ,இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே .வீணா என் தலையை உருட்டாதீங்க .உன்னிஷ்டம் உன் உரிமையிலே நான் தலையிடமாட்டேன் .உனக்கு ஏதாவது உதவின்னா மட்டும்
என்கிட்டே சொல்லு அது புருஷனான.என்கடமை .தூபம் போட்டு ஆடவைத்தாகி விட்டது என்ற திருப்தியுடன் படுத்துவிட்டான் வசந்த் .இரவெல்லாம் சுசி தூங்கவில்லை .நிறைய யோ..
சித்தால் .
வக்கீல் நோட்டீஸ் பறந்தது மாணிக்கவேலருக்கு ..அதிர்ந்து போனார் மாணிக்கவேலர் .சுசியா இப்படி?கணக்கில்லாமல் செலவழித்து ,குறைவில்லாமல் எவ்வளவு செய்தார் .அந்த சுசிலா தன தம்பியிடம் கேவலம் சொத்துக்காக நோட்டீஸ் விட்டிருக்கால்
."என்னங்க ,ஏன் தபாலை பார்த்து இப்படி இடிஞ்சு போயிட்டீக ?என்னங்க எழுதி இருக்கு ?'
'மீனாஷி உன் பெண்ணுக்கு மனிதாபிமானமே கிடையாதா /?எத்தனை செய்தோம் எவ்வளவு பணம் இவளுக்காக செலவழித்திருப்போம் அதையெல்லாம் விட்டுவிட்டு தன தம்பிக்கு கிடைக்க இருக்கும் இந்த வீட்டிலும் பங்கு வேண்டுமாம் .நோட்டீஸ் விட்டிருக்கால் உன் பெண் ."
"அடிப்பாவி பணம்னா ரத்தபாசத்தைகூட மறந்துட்டாலே இவளுக்கு பங்கு கொடுக்காட்டி என்ன செய்வா ?கொர்ட்டுக்குப்போகட்டுமேஅது எப்படி நிற்கும் ?நீங்க சுயமா சம்பாதித்தது நீங்க இஷ்ட்டப்பட்டு யாருக்கு வேணாலும் கொடுக்கலாம் இல்லையா?'
"சபாஷ் மீனாட்சி உனக்குக்கூட சட்டம் தெரிஞ்சுருக்கே ,இருந்தாலும் உன் பெண்ணுக்கு இத்தனை ஆகாத்தியம் கூடாதுடி ''
'இவளுக்குத்தான் கோர்ட் படி ஏரத்தேரியுமா ? நம்ம பக்கம் நியாயம் இருக்கும்போது இவளால் என்ன செய்ய முடியும் /பார்த்து விடலாம் ''
தாயும் மகளும் கச்சை கட்டிக்கொள்ள வசந்த் தனக்கு பெரிய அமோஎன்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒன்றும் பட்டுக்கொல்லாதது மாதிரி வேடிக்கை பார்த்தான்
சட்டப்படி சுயார்ஜித சொத்து என்பதால் வீடு முரளிக்கே என தீர்ப்பானது .
தீர்ப்பு கேட்டு கடுப்பானாள் சுசிலா .ஆனால் முரளியோ அந்த வீட்டை தன அக்காள் சுசீலா பேருக்கே எழுதிக்கொடுக்க வக்கீலை நாடினான் ,''உனக்கென்னடா பைத்தியமா பிடிச்சிருக்கு ?அவள்
கோவிச்சா கொவிச்சுக்கட்டுமே .வராட்டி போகட்டுமே அதுக்காகநீஏன் நஷ்டப்படனும் இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் ''தாண்டவம் ஆடினார் மாணிக்கவேலர் .
முரளி அமைதியாக ,ஆனால் ஆழமாகச்சொன்னான் '
'அப்பா இதை நீங்க எனக்கு கொடுதிட்டஈங்கன்ன அது என்னுடைய பொருளாகிவிடுகிறது என் பொருளை நான் யாருக்கு வேணுமானாலும் கொடுப்பேன் அதைத்தடுக்க உங்களுக்கு உரிமை கிடையாது இல்லையா ?
''அப்பா நான் உறவை மதிக்கிறவன் ,பாசத்தை போற்றுகிறவன் .கேவலம் பணத்துக்காக என் தமக்கை உறவை அறுத்துக்க நான் விரும்பலே அவள் சந்தோஷமே என் சந்தோசம் .உயிரில்லாத
இந்த கட்டிடத்தால் பாசத்தை இழக்க நான் விரும்பலே .வாழ்க்கையில் இனி இறக்கப்போகிரோமே தவிர பிறக்கப்போவதில்லை அப்படி உடன் பிறந்தவலான என் தமக்கையின் குழந்தைகளும் என் குழந்தைகளும் ஒற்றுமையா இருக்கிறதைத்தான் நான்விரும்பறேன் .""
நேருக்குநேர் வாக்குவாதம் செய்து உறவை கட்டோடு முறித்துக்கொள்ளும் நோக்கத்துடன் அங்கு வந்தவலான சுசீலா தன தம்பியின் பேச்சு காதில் விழுந்ததும் துசி போல் ஆகிப்போனால் .
"என்னை மன்னிச்சுடுடா உன் பெருந்தன்மைக்கு முன்னால நான் துரும்புக்குகூட பெற மாட்டேன் இந்த கட்டடத்தை விட உன் அன்பு எத்தனை பெருசுடா எனக்கு உன் அன்புதான் இனி வேணும் இந்த வீடே எனக்கு வேண்டாம் "நெகிழ்ந்தால்
இந்த எதிர்பாரா பாசப்போரின் திருப்பத்தால் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் நின்றனர் பெற்றோர் . வசந்த் கடுப்பாகினாலும் வெளிக்காட்டாமல் அசடு வழிய சிரித்து வைத்தான் /
தேவி 2-11- 1994

உபதேசம் --தினமலர்-- வாரமலர்- 11-1--2004


"நீயா இருக்கிறதாலே எல்லாவற்றையும் பொறுத்து க்கொண்டிருக்கே இன்னொரு பெண்ணா இருந்தா வீட்டையே இரண்டு பண்ணிருப்பா .அவ்வளவுஏன் உன் நிலைமைல நான் இருந்தா என்ன செய்வேன் தெரியுமா ?சதா கொடுமை படுத்தும் உன்னோட மாமியாரை வீட்டை விட்டே துரத்திருப்பேன் .அது முடியாட்டா தனிக்குடித்தனம் போயிருப்பேன் .நீ சுத்த வேஸ்ட் " தன தைரியத்தை தானே
மெச்சிக்கொள்ளும் விதத்தில் ஆத்திரமும் ,ஆவேசமும் முகத்தில் தெரிய சொன்னால் ஜமுனா .இதைக்கேட்ட அவளது தோழி உமாவுக்கு பொறாமையாகக்கூட இருந்தது .என்ன மனத்துணிவு ? நமக்குமட்டும் ஏன் அது வரமாட்டேங்கிறது"நீ சொல்வெடி ..உன் அளவுக்கு தைரியம் எனக்கு வரவே வராதுடி "ஏக்கமாய் சொன்னாள் உமா .
"அப்படிசொன்னா எப்படி ?அனுபவி ,தைரியம்கி றது வெளி இடங்களில் இருந்து வரதில்லை நம்முள்ளேயே நாமே வளர்த்துக்கொள்ள வேண்டியது புரியுதா
/'நீ படித்தவள் ,உனக்கு இப்படியெல்லாம் தோணுது ,ஆனா ,எனக்...
கு பயம்தானே வருது அத்தையை பார்த்ததும் ஊஹீம் ,எனக்கு தைரியம் வராதுடி .

"அப்படியில்லே உமா ,வந்தவுடனேயே உன்னோட உரிமைகளை மாமியார் வீட்டில் நிலை நாட்டி இருக்கணும் .சும்மா பயந்த பயந்து இடம் கொடுத்திட்டே .அவங்க கை ஒங்கிடுச்சு?,? நீ அடிமை மாதிரி ஆயிட்டே "எடுத்துச்சொன்னாள் ஜமுனா

'' என்னை அடங்கி இருக்கவே பழக்கப்படுத்தியது என் பெற்றோர் .பெரியவர்களிடம் மரியா" தை குறைவா பேசக்கூட என் நாக்கு வராது நான் வளர்ந்த விதம் அப்படி "
இதைப்பாருடி ,நான் உன்னை சண்டை போடச்சொல்லலை பாடம் கற்பிக்கச்சொல்கிறேன்.." ஜமுனா ".

ஜமுனாவின் ஆழ்ந்த அனுதாபமும் ,தீவிர நட்பும் நல்லதுக்கா ?கெட்டதுக்கா என்று புரியாமல் குழம்பினாள் உமா .
காலையில் எழுந்ததிலிருந்து உன்னை எப்படி விரட்டிக்கொண்டிருக்காங்க உன் மாமியார் .பொறுத்தது போதும் ,ஒன்னு அவளை விரட்டு இல்லே நீ வெளியேறு "திடமாகசொன்னாள் ஜமுனா
என்னதான் ஜமுனா தைரியம் கொடுத்தாலும் உமாவால் அப்படி செய்ய முடியாது ,.
"ஏன் ஜமுனா ,அப்படின்னா நீஉன் மாமியாரை அடக்கி ஆண்டு கொண்டிருக்கேன்னு சொல்லு ...கொடுத்து வைத்தவள் நீ "
ஜமுனா பதில் சொல்ல வாய் திறக்கும்போது --- தெரு கேட் திறக்கப்படும் ஒலி கேட்டது .ஜமுனா அவசரமாக எழுந்தாள்'எதிர்த்திசையை பார்த்து பவ்யமாக நின்றாள்.வந்தது ஜமுனாவின் மாமியார் தான்
"ஏண்டி ஜமுனா அங்கே போட்டதை போட்டப்படி வைச்சுட்டு இங்கே வந்து என்ன கதை அளந்துகிட்டு இருக்கே ?வெளியே நான் சித்தநான் போகக்கூடாதே வீடு வீடா கிளம்பிடுவியே ,போடி போய் வேலையைப்பாரு " என்று சொல்லி விரட்டினாள்
"இதோ போறேன் அத்தை "பெட்டிப்பாம்பாய் எழுந்து ஒரு எதிர்ப்பக்கூட காட்டாமல் ஓட்டமாய் ஒடினாள்ஜமுனா .
உமாவுக்கு வியப்பாய் இருந்தது இத்தனை நாழி சவடாலா பேசிய ஜமுனாவா இது ?பெட்டிப்பாம்பாய் போறாளே அப்படியென்றால்...தன் வாழ்க்கையில் நடக்க முடியாததை மற்றவர் வாழ்க்கையில்
,விரிசலை ஏற்படுத்தி ஊருக்கு உபதேசம் செய்யும் ஜமுனா போன்ற பெண்களை நினைத்து கோபப்படுவதை விட ,அனுதாபப்படுவதுதான் முறை .அந்த சாத்தானின் வேதத்தை எண்ணிஎண்ணி சிரித்தாள்உமா
தினமலர் --வாரமலர் 11 -1 -2004

திருப்தி தினமலர்-- பெண்கள்மலர் -17-12--2005

எரிச்சலோடு ஸ்கூட்டரை கிளப்பி வெளியேறினான் கவுசிக் .போகும் வழியெல்லாம் புலம்பிக்கொண்டுதான் போனான் . ச்சே என்ன பெண் இவள் ,வாழ்க்கையைப்பற்றி எதுவுமே தெரியாமல்
இருக்கிறாளே ,அவளைச்சொல்லி குற்றமில்லை ,கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாத பெரிய இடத்துப்பெண்ணை திருமணம் செய்தது நம் தவறு . திருமணம் ஆகி நான்கு மாதத்திற்குள்
எத்தனை வீடு மாறியாயிற்று .இந்தவீட்டில் புகை போக்கி இல்லை ,இதுல கிச்சனுக்குப்பக்கத்திலேயே பாத் ரூம் ,இருக்கு ,இதுல சாமான்கள் வைக்க லாப்டே இல்லை ,இதல காற்று வரவேயில்லை...இப்படியே ஒவ்வொரு வீடாக மாறியாகிவிட்டது .வாழ்க்கையைப்பற்றிய நிதர்சனம் புரியலே .ஆபிசிலேகூட கவுசிக்கை கிண்டல் அடித்தார்கள் நண்பர்கள் .எதிலுமே திருப்தி இல்லாதவள் .அவ அப்பாவிடமே சொல்லி எல்லா சவுரியங்களோடுஒரு வீட்டை கட்டிகொடுக்கச்சொல்லவேண்டியதுதானே,அதை விட்டு விட்டு நம் உயிரை வாங்குறாலே ....மழை வேறு பிடித்துக்கொண்டது இதற்கு என்னதான் தீர்வு ?மறுபடியும் அலைய வேண்டியதுதான் எல்லா ஏரியாவையும் சுற்றியாகிவிட்டது சிரிப்பாய் சிரித்தாயிற்று .
"என்னப்பா கவுசிக் தானா பேசிட்டு வர்றே ,என்னாச்சு உனக்கு ?"நண்பன் நாராயணன் கேட்டான்
"வேறென்ன வீட்டுப்பிரச்சனைதான் .இந்த வீட்டிலும் ஏதாவது குறை சொல்லிருப்பாள்அவன் மனைவி "என்று கிண்டல் செய்தான் மனோகரன் .
"என் வேதனை உங்களுக்கெல்லாம் வேடிக்கையாபோச்சு ,எல்லாம் என் காலமடா "நொந்து கொண்டான் கவுசிக் .
சாயந்திரம் ஆபிஸ் முடிந்து கடைத்தெருவில் சுற்றிவிட்டு லேட்டாகப்போனான் கவுசிக் ,மனைவியின் புலம்பல் ஆரம்பமாகிவிடுமே என்று வழக்கத்திற்கு மாறாக மாலினி காபியுடன் வந்தாள்.அவன் அருகில் "என்னங்க டிரஸ் சேன்ஞ்பண்ணாமல் என்னயோசனை?"
"தலைவலி லேசா "
"இந்தாங்க காபியை குடிங்க சூடா தலைவலி பறந்து போயிடும் "என்று சொன்ன மாலினியை அதிசயத்துடன் பார்த்தான்
'என்ன அப்படி பார்க்குறீங்க ?"
"ஒண்ணுமில்லே "ஏன் நாமாக எதையாவது பேசி வீடு பற்றி நியாபகப்படுத்தவேண்டும் என்று நினைத்தான்
என்ன ஆச்சரியம் ?வீட்டை பற்றி ஒரு வார்த்தை
கூட மாலினி பேசவில்லை ?அன்று முழுவதும் அவள் அப்பா அம்மா
ஏதாவது சொல்லிருப்பாங்களோ ?வேறு யார் என்ன சொல்லிருப்பார்கள் ஏனிந்த மாற்றம் ?மனதுக்குள் தவித்தான் அவனால்
அந்த மவுனத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை .இரவு படுக்கையறையில் ...
"மாலினி ஒண்ணுகேட்பேன் ,கோபபப்படக்கூடாதுஎன்ன சரியா ?கோபப்படாம பதில் சொல்லணும் "
என்னங்க கேளுங்க "
:"வீட்டை மாற்றனும்னு சொன்னியே ,அதைப்பற்றி ஏன் பேசவே இல்லை "
"அதுவா ?இன்னைக்கு மார்கெட் போனப்போ ஞானோதயம் ஏற்பட்டுச்சு எனக்கு, அதான் இந்த வீடே போதுமுன்னு திருப்தி ஆயிட்டேன் ."
"என்ன சொல்லுறே? "
" ஆமாங்க எனக்கு வெளி உலகமே தெரியாமவச்சுட்டாரு எங்கப்பா , எல்லா தேவையும் வீட்டுக்குள்ளே கிடைத்தது, அதான் வாழ்க்கையை பற்றிய யதார்த்தம் புரியல , நான் சௌகரியத்திலேயே வாழ்ந்திட்டதால இது சரியில்லேன்னு சொல்லி உங்களையும் என்னையும் கஷ்டப்படுத்திகிட்டேன் , இந்த ரோடு போடுற ஜனங்களை பார்த்தேன் , வெயிலும் மழையும் நிறைந்த வெட்ட வெளியிலே வாழுறாங்க போக்குவரத்து புகை , மழைதண்ணியில பரவும் கொசுத்தொல்லை , துர்நாற்றம் அந்தரங்க விசயங்களையும் அவசரமா வர்ற இயற்க்கை உந்துதலையும் வெட்ட வெளியிலேயே கழிக்கவேண்டிய அவலம் இப்படி ஒரு சௌரியமும் இல்லாம அந்த பெண்களால் எப்படி வாழ்க்கைமீது பற்றோடு வாழமுடிகிறது , எனக்கு ஒரு சின்ன அசௌகரியம் கூட தாங்கிக்க முடியவில்லேயே , வாழ்க்கையை அதோட போக்கிலேயே எடுத்துகொண்டு நல்ல விஷயத்தை மட்டுமே உள்வாங்கிகொள்ளும் அந்த பெண்களுடைய பண்பட்ட மனோபாவத்தில் ஒரு பங்கு கூட எனக்கு இல்லாமல் போனதை எண்ணிப்பார்த்தேன் , சின்ன விஷயத்திற்கெல்லாம் அப்செட்டாகி , உங்களையும் கஷ்ட்டபடுத்திட்டேன் , சாரிங்க நம்மைவிட கஷ்ட்டபடுபவர்களை பார்த்தா நம் வாழ்க்கை மேலானதுன்னு தெரிஞ்சுகிட்டேன் ".
அப்பாடான்னு பெருமூச்சு விட்டான் கௌசிக்
தினமலர் , பெண்கள்மலர் , 17/12/2005

பாசத்தைத்தேடி --தினபூமி ---மங்கயர் பூமி \28--1--1997

-கூட்டம் இல்லாத இடமாய் நீண்ட தூரம் நடந்து ஒரு கட்டு மரத்தின் பக்கம் பிரியாவும் பிரபுவும் ஒதுங்கி இருந்தனர் .அவர்கள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தது ,மற்றவர்களைப்போல் இருளை சாதகமாக்கிகொள்ள அல்ல .அப்படியோரு நல்லவன் பிரபு அதுதான் அவன் மீது பிரேமை கொள்ளகாரனமாயிற்று.பிரியாவிற்கு நல்லதோர் நட்பு நாளடைவில் காதலாயிற்று கடந்த மூன்று மாதங்களாக
அது தொடர்கிறது ,தொடர்ந்தாலும் இருவருமே நல்ல குடும்பத்தில் பிறந்ததினால் ஒருவரையொருவர் தொட்டு பேசுவதுகூட கிடையாது .
"எதுக்கு அதைரியப்படுற பிரியா ,நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும் "
'பிரபு இந்த வார்த்தையை உங்கம்மால்ல சொல்லணும் .எனக்கென்னவோ பயமா இருக்கு என்னைப்பார்த்ததும் உங்கம்மா வேண்டாம்னு சொல்லிடுவாங்களோன்னு பயமாயிருக்கு "
"ப்ச் ,சுததபேத்தல்இது ,நான்தான் உன்னை காதலிக்கிறதை முன்பே சொல்லியிருக்கேனே ,உன்னை அழைச்சுகிட்டு போறதே ஒரு பார்மா லிட்டிதன் எங்கம்மாவைப்பற்றி உனக்குத்தெரியாது
அவங்க ரொம்ப தங்கமானவங்க .அப்ப ..நான் கிளம்பட்டுமா ?மூஞ்சியை சீரீயசா வச்சுக்காம சிரிச்சுகிட்டு விடை கொடு பார்க்கலாம் கமான் "
கஷ்டப்பட்டு சிரித்தபடியே "சீ யூவெள்ளிக்கிழமை பார்க்கலாம் "என்றாள். இருவரும் பிரிந்தனர் .பிரியாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது அந்த அம்மாவுக்கு சம்மதம் என்றால்உடனே நம் தந்தையை தானே பார்க்கணும் அதை விட்டு என்னை ஏன் அழைத்து வரச்சொல்லியிருக்கிறார்கள்<ஒரு வேளைசினிமாவில் வருவது மாதிரி தன்னை அழைத்து மிரட்டி ,,பணத்தை கொடுத்து
ஒதுங்கி போயிடுன்னு சொல்லவா ?இப்ப போவதா ? வேண்டாமா ?. ஏன் நாமாக கற்பனை பண்ணிக்கொள்ளவேண்டும் ?பிரபு சொன்னதுபோல் அவர்கள் நல்லவர்களாகவும் இருக்கலாமே
குழப்பத்திலேயே நாள் போனது தெரியவில்லை . காலிங் பெல் சப்தித்தது ஓடிப்போய் பார்த்தாள்பிரியா .பிரபு நின்றிருந்தான்
/"என்ன பிரியா இது எத்தனை நேரம்தான் காத்திருப்பது ? அதான் வந்துட்டேன் புறப்பட்டு சீக்கிரம் "
உங்களுடனேவா?"
பயப்படாதே தெரு முனையிலே யேஇறக்கிவிட்டுடுறேன் ஒரு ஐந்து நிமிடம் கழித்து நீ வா .என்ன சரியா ?'
சரி புறப்படுங்கள் " சொன்னபடியே முனையிலேயே இறக்கிவிட்டு புறப்பட்டான் பிரபு
அந்த காட்சியை மாடியிலிருந்து பார்த்தாலும் மகன் வருவதற்குள் ஒன்று தெரியாதது மாதிரி அன்னபூ ரணி அவசரமாக இறங்கி வந்து ஹாலில் உள்ள டி,வியை ஆனபண்ணிவிட்டு எதிரில்
அமர்ந்துகொண்டாள் .பிரபு நிலை கொள்ளாமல் உள்ளுக்கும் ,வெளிக்குமாக அலைந்தது பார்த்து உள்ளுக்குள்ளேயே நகைத்து கொண்டாள்அன்ன பூ ரணி .பிரியா வந்ததும் வாசலிலேயே நிறுத்திவிட்டு உள்ளே ஓடிவந்தான்
"பிரபு ,என்னப்பா இது ,ஏன் எத்தனை பர பரப்பாஓடி வரே ..என்ன விஷயம் ?''நடித்தாள்அன்ன பூ ரணி.
"அம்மா .....வந்து ...நான் சொன்னேன்னே ,அந்த பிரியா வந்திருக்காம்மா ."
"ஓ,,அவளா ?உள்ளே கூப்பிடு "அலட்சியமாக சொன்னாள்.
''பிரியா வாவா " குதுகலத்தோடு கூப்பிட்டான் .. தலை குனிந்து தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்பிரியா "
"சும்மா உட்கார் இது நம்ம வீடுதான் "தன்னையறியாமல் சந்தோசத்தில் கூவினான் பிரபு "
பிரியா எங்கே உட்கார்ந்து விடுவாளோ என்ற பயத்தில் அன்ன பூ ரணி கொஞ்சம் கடுமை காட்டி பேசினாள்"பிரபு நீ சற்று வெளியே இரு ,கூப்பிட்டது வரலாம் "கட்டளை இட்டா.ல் .
அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டு அசடு வழிந்தபடியே வெளியே போனான் .
நாம் நினைத்தபடியே தான் நடக்கப்போகிறது எதற்கும் தைரியமா க இருக்கவேண்டும் நினைத்துக்கொண்டாலும் பிரியாவுக்கு வியர்வை வழிந்தது பயத்தில்
"என் பையனை உனக்கு எத்தனை நாளா பழக்கம் ?'
"மூன்று மாதமாக "தணிந்தே வந்தது பதில்
"ஏன் வேறு பையனே கிடைக்கவில்லையா ?'
அந்த வார்த்தையில் தொனித்த பரிகாசத்தை உணர்ந்ததும் ,துப்பாக்கி குண்டுகள் போல சீறீக்கொண்டு வந்தன பிரியாவி வார்த்தைகள்
"நல்ல மனசை பார்த்து வரதுதான் காதல் "
உன் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியுமா ?'
எங்கள் வீட்டில் சம்மதித்து விட்டார்கள் "
"அதுக்கு காரணம் இருக்கு .பெரிய இடத்துபையன் என்றால் மறுப்பு சொல்லவா போகிறார்கள் ?"
"போதும் நிறுத்துங்க ,நீங்க சொல்ற பணம் எங்கிட்டேயும் இருக்கு .நான் எங்கப்பாவுக்கு ஒரே பெண் .என் சொத்துக்காக என்னை மணக்க ஆயிரம் பேர் போட்டி ஆனால் நான் உங்க மகனை விரும்பறேன் அதற்கு காரணமே நீங்கதான் "
"நீ என்ன சொல்றே <"அதிர்ந்து போய்கேட்டால் அன்ன பூ ரணி
"ஆமாம்மா ,ஸ்கூல் படிப்பு முடிச்ச கையோடவே அம்மா போய்ட்டாங்க அப்பாவோட வேதனை இப்படி அப்படின்னு சொல்ல்ச்முடியலே நான்கூட வேதனையை அடக்கிகிட்டேன் .தாய்பாசத்தை
முழுமையா அனுபவிக்காதவள் நான் .உங்க மகன் என்னை சந்திக்கும் போதெல்லாம் உங்கள் அன்பையும் பாசத்தையும் பற்றித்தான் பேசுவார் அந்த மாதிரி அன்பையும் பாசத்தையும் வச்சுக்கிட்டிருக்கிற தாய் கிடக்கிறதுக்கு ஒவ்வொரு மகனு மகளும் எத்தனை தவம் செஞ்சுருக்கனும்னு நினைப்பேன் எனக்கும் அந்த மாதிரி தாய் கிடைக்கணும்னா இனி அது முடியாது .ஆனால் அந்த மாதிரி ஒரு மாமியார் .. மாமியாரும் தாய் மாதிரிதானே எனக்கு வேணும்னு ஏங்க ஆரம்பித்தேன் எதிர் பார்க்க ஆரம்பித்தேன் அதன் விளைவுதான் நட்போடு பழகின உங்க மகன் கிட்டே காதலை வளர்த்துகிட்டேன் .அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லேன்னு எப்ப புரிஞ்சுகிட்டேன் பரவாயில்லே ..அந்த நினைவே எனக்குப்போதும் ,நான் வரேன் "
அவள் பதில்களினால் எண்ணங்களினால் தன போலி வேடத்தை கலைந்த அன்ன பூ ரணி "பிரியா உன்னை டெஸ்ட் பண்ணத்தான் அப்படி பேசினேன் நீதான் இந்த வீட்டு மருமகள் ..பிரபு ..இங்கே வா
மச மசன்னு நிக்காம இந்த மாதத்திலேயே ஒரு நல்ல நாள் பார்க்கச்சொல்லி நம்ம ஜோசியர் கிட்டே சொல்லு போபோ "பிரியா அன்ன பூ ரணி காலிலே விழ அவளை ஆசிர்வதித்தால் அன்ன பூ ரணி
"அம்மா ,உங்களிடம் மரியாதை குறைவாக பேசி இருந்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள் "
"பிரியா உன்னை டெஸ்ட் செய்வதாக எண்ணி நான்தான் கொஞ்சம் அதிகப்படியாகவே பேசிட்டேன் நீதான் என்னை மன்னிக்க,,....குறுக்கிட்டால் பிரியா
"அம்மா நீங்க பெரியவங்க ,அப்படியெல்லாம் சொல்லாதீங்க உங்களை மாமியாரா அடைஞ்சதுக்கு நான் பெருமை படறேன் "
"[போதும் மாமியாரும் மருமகளும் செம் சைடு கோல் போட்டால் என் பாடுதான் திண்டாட்டம் என்று பிரபு ஜோக்கடிக்க மாமியாரும் மருமகளும் அதை ரசித்து கல கலவென் சிரித்தனர்
பிரபுவின் குது களத்தில் பிரத்யேகமாக ஒரு குறு குறுப்பு துள்ளிக்கொண்டிருந்தது காதல் பழுத்து கனியானதால் இருக்கலாம்
தின பூமி மங்கையYARBOOMI28--1--1997

கொடுத்துவைத்தவள் --தினமலர்--பெண்கள் மலர்---2 --12-- 2006

  உஷா அந்த ஹாலின் அழகான டைனிங் டேபிளை பார்த்து ஒரு முறை பெருமூச்சு விட்டாள் வெள்ளித்தட்டுகள்,பீங்கான்

கோப்பைகள் ,கண்ணாடி கிண்ணங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன ,.நறுமணம் கமழும் சுவையான ,தென்னிந்திய சமையல் ,பாஸ்ட் பூட்,எல்லாம் உள்ளே தயாராகி கொண்டிருந்தன .நெருங்கின தோழியை நீண்ட நாள் கழித்து சந்திக்கப்போகும் சந்தோசம் அவள் மனதில் நிறைந்திருந்தது .
...


கல்பனா கொடுத்து வைத்தவள் ,நிறைவான வாழ்க்கை அவளுக்கு கிடைச்சிருக்கு .ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்தாலும் இப்படி அடிக்கவேண்டும் ஏக்கப்பெருமூச்சுடன் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும்போது நடிகை கல்பனா ஒயிலாக மாடிப்படிகளில் இறங்கி வந்தாள்.

"உஷா ,வந்து ரொம்ப நேரமாச்சா ?'என்று கேட்டுக்கொண்டே ஓடிவந்து அவள் கைகளைப்பிடித்துக்கொண்டால் .கல்பனா

இருவரும் டைனிங் டேபிளில் அமர வேலை ஆட்கள் சாப்பாட்டு அயிட்டங்களை கொண்டு வந்து டேபிளில் அடுக்கினர்

மலைத்துப்போனாள் உஷா

"என்ன மலைச்சு போயிட்டே சாப்பிடு உஷா "

தோழியிடம் பழைய கதைகளை பேசினாள் கல்பனா .ஒவ்வொரு அயிட்டத்தையும் ருசித்து சப்பிட்டப்படி கல்பனா சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள் உஷா .

அப்பொழுதுதான் கல்பனாவின் தட்டை பார்த்தாள்உஷா ,

"ஏய் கல்பனா ஏன் எதையுமே சாப்பிடாம சாப்பாட்டை அலைஞ் சிட்டிருக்கே ?'

"உஷா ,நான் கொஞ்சம் சாபபிடணும்.ஸ்வீட் ,பால் தயிர் எதையும் அதிகமா சாப்பிடக்கூடாது ,கிழங்கு வகைகளை தொடவே கூடாது .என் உடம்பு பெருத்துடுச்சுன்னா சினிமாவில சான்ஸ் கிடைக்காது அப்புறம் எப்படி உல்லாச வாழ்க்கை வாழறது ?சினிமாவில நடிக்கிறமாதிரி வீட்டுலேயும் சாப்பிடறமாதிரி நடிக்கவேண்டி இருக்கு ,வெளில இருக்கிறவங்களுக்கு ,நாங்க

கொடுத்து வைத்த மாதிரி தெரியும் ஆனால் நாங்களும் பல வகையிலும் கஷ்டப்படுகிறோம் என்பது தெரியாது சில நேரங்களில் நடிப்புக்கே முழுக்குப்போட்டுடனும் நினைப்போம் ஆனால் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையை ஆகிட்டோமே

விட முடியலே இக்கரைக்கு அக்கரைபச்சை அவ்வளவுதான் "அலுத்துக்கொண்டாள் கல்பனா .

வீட்டுக்குள் வந்ததும் கல்பனாவின் ஏகபோக வாழ்க்கையைப்பார்த்ததும் பொறாமைப்பட்ட உஷாவி மனது இப்போது அவளுக்காக வருந்தியது .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கத்தான் செய்யுது இதுதான் வாழ்க்கை போலும்தினமலர் பெண்கள் மலர் 2--12--2006

சின்னவிஷயம் --கலைமகள் -- நவம்பர் 1994

 சிரியவீடு ,சுற்றிலும் அடக்கமான தோட்டம் ஆசிரமம் போன்ற சூழ் நிலை ,அந்த அமைதியான சூழ்நிலை மனதுக்கு இதமாக
இருந்ததுசாரதாவிற்கு ;
கையிலுள்ள பெட்டியை கீழே வைத்துவிட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்......கதவைத்திறந்த வசந்தா முன்னைவிட பாதியாக இளைத்துவிட்டிரு ந்தால் ,நடையிலும் ஒரு தளர்ச்சி"உடம்புக்கு என்ன ?உருகிபோயிட்டியே ?யார் இருக்காங்க உன்கூட ?"பல கேள்விகளுடன் உள்ளே வந்தவளுக்கு திகைப்பு ,அவள் மட்டும்தான் தனியாக வாழ்ந்துகொண்டிருந்தாள்
ஆச்சரியப்படாதே .உட்கார் சாரதா .காலம் மாறிக்கிட்டுபோகிற போக்கில் பார்த்தால் இன்னும் அதிகம் கருணை இல்லங்கள் தேவைப்படும் "
"நீகூட ரொம்ப மாறிட்டே வசந்தா "
" ஆமாம் ,உஜாலாவுக்கு மாறிட்டேன்னு சொல்றியா "அது என்ன இழவோ 'டை 'ஒத்துக்கொள்வதில்லை ,உண்மை வேஷம் தெரிகிறது அது சரி எத்தனை காலமாச்சு உன்னைப்பார்த்து ?எப்படி இருக்கே ?'
"அதிருக்கட்டும் வசந்தா ,உன்பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள் ?உன்தம்பி ,தங்கை எல்லாம் எங்கே ?இப்படி நீ தனியாக "
"சாரதா தனியாகத்தான் வந்தோம் தனியாகத்தான் போகணும் யார் கூட இருந்தாலும் நம் உயிர் தனியாகத்தானே போகப்போகிறது "
"ரொம்ப தத்துவ புத்தகங்கள் படிக்கிறாய் போலிருக்கிறது "
"இளரத்தம் இருக்கிற வரையில் மற்றவர்கள் சொல்வதையெல்லாம் அசட்டையாக தள்ளிடறோம் முதுமையிலே
அவைகள்தான் மன அமைதி தரும் ஊன்று கோலாக இருக்கு "
"உண்மைதான் வசந்தா வாழ்க்கையிலே எத்தனையோ அனுபவங்கள் ....."பெருமூச்சு விடடாள்
சாரதா உனக்கு காப்பியா ?டீயா ?""
"பரவாயில்லை உனக்குஏன் கஷ்டம் <நானே போட்டுக்கிறேனே "
"நோ ,நோ,எத்தனை வருடங்கள் கழித்து வந்திருக்கிறாய் ?உன்னை வேலை வாங்குவதா ?ஆமாம் நீ உன்பிள்ளையோடுதானேஇருக்கிறாய் "
"இல்லை வசந்தா ,உன்னைப்போலவே நானும் ஒரு தனி ஆசிரமம் அமைத்திக்கொண்டிருக்கேன் "
"என்ன சொல்றே சாரதா ,தன்னுடன் தான் வந்து இருக்கவேண்டும் என்று உன் பிள்ளை பாசத்தோடு கூப்பிட்டதால்தானே அவனுடன் போனாய் ....இப்ப ...தனியா இருக்கிறேன் என்கிறாயே ..என்ன விஷயம் சாரதா?'கேட்டுக்கொண்டே காபியை ஆற்றி டம்ளரில் ஊ ற்றிகொடுத்தால் .
"தலைமுறைப்பிளவு அதிகரித்துக்கொண்டு போகும் இந்நாளில் ...வயதானவர்கள் இளையவர்களுக்கு பாரம் ,இதுதான் காரணம் "
"மற்றவர்களுக்கு பாரம் சரி பெற்றவர்களையே பிள்ளை பாரமாகக்கருதலாமா ?அதிசயமா இருக்கே ,நான் கூட நினைச்சதுண்டு சீல நேரங்களில் ,நீ கொடுத்து வைத்தவள் ,உனக்கு கணவர் ,பிள்ளைகள்
இருக்கிறார்கள் ,நல்லது ,கெட்டதைபார்க்க --ஆனால் எனக்கு ..ஐ ..மிஸ்ட் தி பஸ் 'என்று "
"இக்கரைக்கு அக்கரைப்பச்சை வசந்தா ,உனக்கு நியாபகம் இருக்கா ,கிராமத்தில் இருந்த என்னை என் மகன் வீட்டை விற்றுவிட்டு தன்னோடு கூப்பிட்டபொழுது,உன்கிட்டே இதுபற்றி சொன்னபோது நீ அட்வைஸ் பண்ணியே ......அது நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது "
"என்ன சொன்னேன் நியாபகம் வரமாட்டேங்குது இப்பவெல்லாம் "
"நான்சொல்றேன்னு தப்பா நினைக்காதே கையில் உள்ள காசை இறுக்கி வச்சுக்க அதுதான் நல்லது,ஏன்னா காசுதான் கடவுள் என்று சொன்னாய் அதை மட்டும் நான் கைவிடலே அதனால்தான்
இந்த ஆசிரம வாழ்க்கையாவது கிடச்சுது இல்லே கருணை இல்லத்தில்தான் நீஎன்னை பார்க்கமுடியும் ?"
"ரொம்ப துயரம் அடைஞ்சிருக்கேன்னு புரியுது என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விவரமா த்தான் சொல்லேன் "
பழைய நிகழ்ச்சிகளை சாரதாவின் மனம் தொடுத்தது
"கிளம்பலாமா அம்மா?"
"சித்த இருப்பா ,நம்ம வாத்தியார் சம்சாரம் பங்கஜத்தம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திடறேன் நீ சாமான்களை ஏற்று "சொல்லிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக சாரதா வாத்தியார் வீட்டுக்குப்போனாள்
"அடேடே ,சாரதாவா ,புறப்பட்டாச்சா ?"பங்கஜம் கேட்டாள்.
"புறப்பட்டுக்கொண்டே இருக்கிறேன் "
கடைசியா நான் சொன்னதையெல்லாம் நீஏற்க வில்லை பிடிவாதமா கிளம்பிட்டே போனப்பறம் தான் தெரியும் அங்குள்ளவாசனை ?'
"இதைப்பாருங்க பங்கஜத்தம்மா நான் மற்றவர்கள் மாதிரி இல்லே என்னால எங்கேயும் அட்ஜஸ்ட் பண்ணிக்கமுடியும் அதனாலே எந்த பிரச்சனையும் வராது உங்களை மாதிரி இல்லே நான்
அதெல்லாம் இப்போ சொல்வே ,உப்புப்பெறாத விஷயத்திற்குத்தான் என் மாட்டுப்பெண் என்னை காரணம் காட்டி அனுப்பினால் எப்படியோ நீ சமர்த்தா பேரு வாங்கினா சரி "
"என் பிள்ளை கேட்பார் பேச்சு கேட்கிறவன் இல்லே ,நான் என்றால் உயிர் ,சரி நேரமாயிட்டு அப்பா நான் வரேன் ,பொய் லெட்டர் போடுறேன் "
"இந்தாடி குங்குமம் எடுத்துட்டுப்போ "என்று சொல்லி பழம் பூ வெற்றிலையுடன் ஒரு ரவிக்கை துண்டையும் வைத்துக்கொடுத்தாள் பங்கஜம்
ஊரில் தெருவில் எல்லோரிடமும் விடை பெற்றாள் சாரதா
"அத்தை உங்ககிட்டே இருக்கிற அந்த வைரத்தொட்டைநாளைக்கு இரவல் கொடுக்கணும் என் தங்கை கல்யாணத்திற்கு போகணும் "
"அதற்கென்ன பேஷா தரேன் "இப்படி ஒவ்வொரு நகையாக வாங்கிவைத்துக்கொண்டு திருப்பித்தரவில்லை சாரதாவும் பெரிதுபடுத்தவில்லை மெல்ல மெல்ல வீட்டு வேலைகளையெல்லாம் சாரதாவின் தலையில் கட்டிவிட்டு புருஷனுடன் பீச் ,சினிமா ,உறவினர்வீடு என்று சுற்றினால் மருமகள் சின்னஜ்சிருசுதானே என விட்டுப்பிடித்தால் சாரதா .இன்னும் எத்தனையோ விஷயங்கள்
எல்லாவற்றையுமே பெரிதுபடுத்தாமல் விட்டுக்கொடுத்தால் .கடைசியாக ஒரு பெருந்தொகையை கடனாக கொடுங்கள் என்று கேட்டபோழுதுதான் சாரதா விழித்துக்கொண்டால் எந்த நிலையிலும்
கைக்காசை விட்டுவிடாதே என்ற தோழியின் கூற்று நியாபகத்திற்கு வர மறுத்தால் சாரதா வந்தது வினை அதை மனதில் வைத்துக்கொண்டு வக்கிரமான்னால் மருமகள் அக்கம் பக்கத்தில் பொய் மருமகள் பொல்லாதவள் கொடுமைக்காரிஎன்றேல்லாம் சொல்வதாக பொய்களை கணவனிடம் அழுதபடியே சொல்ல -வெகுண்டான் மகன்
""அம்மா உன் வாயையை வைத்துக்கொண்டு சும்மாவேயருக்கவே முடியாதா/?வயதானகாலத்தில் உனக்கேன் புத்தி இப்படி போகிறது ?இனிமேல நீ வீட்டைவிட்டு போகக்கூடாது யாருடனும் பேசக்கூடாது அப்படி இருக்க முடிஞ்சா இரு இல்லே தனி வீடு பார்த்து உன்னை வைச்சிடறேன் ச்சே ஆபிஸ் விட்டு வந்தா நிம்மதியே இல்லாம பண்ணிடறியே "என்று சாடினான்
சாரதா துடித்துப்போய்விட்டால் .அன்றுதான் மரண அடி வாங்கியதுபோல் தொயிந்து போனாள் பொறுக்கமுடியவில்லை அவளால்
அன்றே தனி வீடு பார்க்க புறப்பட்டுவிட்டாள்இரண்டே நாளில் வீடு பார்த்து போகும்முன் மருமகளிடம் கூறினாள்
"நான் எத்தனையோ பெரிய விஷயங்களில் எல்லாம் உன்னை அட்ஜஸ்ட் செய்துகிட்டேன் ஆனால் நீஒரு சின்ன விஷயத்தை இப்படி பெரிசு படுத்திட்டியே வேலைக்காரி வரலே எல்லாவேலையும்
நானேதான் செய்யுறேன் என்று சொன்னதை திரித்துக்கூறி என் மகனையையே எதிரியாக்கிவிட்டாயே "சாரதா நொந்து போய்சொன்னா'ல் .
"ஓஹோ இப்பதானே புரியுது இத்தனை நாளும் அட்ஜஸ்ட் செய்ததா சொல்லி,சொல்லி உள்ளுக்குள்ளேயே புழுங்கிகிட்டு இருந்திருக்கீங்க அதான் இன்னைக்கு பொங்கிட்டீங்க "என்று எதிர்த்துச்சாடினாள் மருமகள்
ஊரிலிருந்து புறப்படும்போது பங்கஜத்தம்மா சொன்னபடியே சின்ன விஷயத்தை பெரிசு படுத்திட்டால் மருமகள் .மனம் உடைந்த நான் கையிருப்பை இழக்காமல் உன் அறிவுரைப்படி விழித்துக்கொண்டதால் தனி வீடு பார்த்துவிட்டேன் வசந்தா ".
"நீ செஞ்சது ரொம்பச்சரி சாரதா போகட்டும் என் கூடவாவது நாலு நாள் தங்கிட்டுப்போயேன்"
"உன்னிஷ்டம் வசந்தா இப்ப நாம சுதந்திரப்பறவைகள் ,கட்டுப்பாடு கிடையாது ,அவசியம் பெண்களுக்கு வேலையோ ,தொழிலோ கைவசம் இருக்கணும் ,அப்பத்தான் முதுமையிலே தெம்பா வாழ முடியும் எல்லாவற்றுக்கும் மேலா எந்த நிலையிலும் துணிச்சலை கை விடவே கூடாதுன்னு அனுபவத்திலே புரிஞ்சுகிட்டேன் வசந்தா "
"தனித்திரு ,விழித்திருன்னு சொன்னது நம்மை போன்ற முதுமை பருவத்தினருக்காக சொல்லப்பட்டதோ "இருவரும் கல கலவென சிரித்து தம் கவலைகளை மறக்க முனைந்து கொண்டிருந்தார்கள்
கலைமகள் - நவம்பர் 1994

கோவில் -- தினமலர்--பெண்கள்மலர்--28-5- 2011
 "பார்வதி ,நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே சாயங்காலம் கிளம்பி போற உன் கணவர் நைட்டுதான் திரும்பி வரார் உன்னைக்கேட்டால் கோவிலுக்கு போயிருக்கார்னு சொல்றே ....ஆனால் .......'
அம்புஜம் இழுத்தாள்
'என்ன ஆனால் ...சொல்லு அம்புஜம் "
"நானும் தினமும் என் மகனுக்காக வேண்டிகிட்டு கோவிலுக்குப்போ றேன் .அங்கே ஒரு நாள் கூட உன் கணவரை பார்க்கவில்லை '
...
நீ சரியா பார்த்திருக்க மாட்டே அவர் அங்குதான் இருந்திருப்பார் என்கிட்டே அவர் பொய் சொல்லவேண்டிய அவசியம் என்ன ?"
"அதைத்தான் நானும் கேட்கிறேன் அவர் உன்னிடம்கோவிலுக்குப்போவதாக பொய் சொல்லணும் ?வேறு ஏதோ விஷயம் இருக்கு ..கவனி,ம்மா "
தெளிவாக இருந்த குளத்தில் கல் ஏறிந்துவிட்டு போனாள்அம்புஜம் .பார்வதி குழம்பித்தான் போனாள்
மணிஎட்டு.
கணவர் வந்ததும் பேச்சு கொடுத்து பார்த்தாள் ஒன்றும் விளங்கவில்லை .ஐ ம்பதிலும் சபலம் வரும் அறுபதிலுமா ? கலிகாலமாச்சே .எதுவும் நடக்கலாம் அடுத்தநாள் உஷாரானாள்பார்வதி .
"என்னங்க இன்னைக்கு நானும் உங்களோட கோவிலுக்கு வரேன் வெள்ளிக்கிழமையா இருக்கு "
"என்ன பார்வதி அதிசயமா இருக்கு ?எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்து போகிட்டுத்தான்இருக்கு இந்த வெள்ளிக்கிழமை என்ன விஷேசம் னு நீ கோவிலுக்கு கிளம்பறே?'
என்னமோ தோணித்து ஏன் மனைவியோடு போறதில தப்பா ...கொவிளுக்குத்தானே போறீங்க ?இல்ல வேறு எங்காவதா ?'
"என்னவோ இன்னைக்கு உன்பேச்சே புதுசா இருக்கு ...புதிர் போடாம விஷயத்தை சொல்லு ?'
"நீங்க கோவிலுக்கு போறேன்னு சொல்றது பொய்யாம் , ஒரு நாள் கூட இந்த நேரத்திலே உங்களை அங்கே பார்க்கலைன்னு எல்லா தோழிகளும் சொல்றாங்க ....அப்படின்னா எங்கேதான் போறீங்க ?
"ஓஹோ ..அதான் உன் சந்தேகமா ?நான் கோவில்னு சொன்னது அநாதை விடுதியை .. அங்கு உள்ள அநாதை பிள்ளைகளுக்கு ஆறு மணி முதல் எட்டு மணி வரை ஆங்கிலம் இலவசமா சொல்லித்தரேன் ...அனாதை விடுதி காப்பாளர் எனக்குத்தெரிந்தவர் ஆங்கிலம் சொல்லித்தர ஆள் இல்லைன்னு வருத்தப்பட்டார் உனக்குத்தெரிஞ்சா வேண்டாம் என்பே ..இந்த சேவை என்னோட
மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு அதான் அந்த பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன் .....படிப்பு சொல்லிகொடுக்கிற இடம் கோவிலதானே ?இன்னும் சந்தேகம்னா நீயும் வந்து பாரு அந்த கோவிலை "
"உங்க தங்கமான மாசு புரியாம சந்தேகப்பட்டுட்டேன் ,என்னை மன்னிச்சுடுங்க "என்றாள் பார்வதி .
"நீ என்ன பண்ணுவே நீயும் பெண்தானே சந்தேகம் உங்க பிறப்பிடம் ....அது போகட்டும் நீ இப்ப என் கோவிலுக்கு வரியா ..இல்லையா '?
இல்லே எனக்கு சீரியல் பார்க்கணும் ,நான் வரலே "
சிரித்தபடியே கிளம்பினார்
தினமலர் பெண்கள் மலர்-------28-5--2011