சனி, 11 மார்ச், 2023

சிறுகோட்டுப் பெரும்பழம்

 சிறுகோட்டுப் பெரும்பழம்

தலைவனிடம் தலைவியின் தோழி உரைத்தாள்
வேரல் வேலி மலை நிலமங்கே
வேரின் தூரில் தொங்கும் பலா
சாரல்நாட நான் கூறல் கேளாய்
உன்மீது கொண்ட காதலால் தலைவி
உன்மத்தம் ஆகி உயிர்வதை படுகிறாள்
பெற்றவளின் காவலையும் மீறும் துணிவு
தருமந்த காதலுக்கே உண்டு அறிவீர்
உணர்ச்சிப் பிழம்பாக பூத்திட்ட மோகத்துள்/
புணர்ந்தன காதல் இதயங்கள் கலந்தன
உன்னிடத்தில் வைத்த உயிரை மீட்கமுடியாமல்
இதயம் முழுமையும் உனக்கே கொடுத்து
எப்பொழு துமுன் எண்ணமே மிகுந்து
உணர்ச்சிக் கூத்தில் உள்ளத்தை வரித்து
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நினைப்பில்
உருமாறி நிற்கின்றாள் உடல் வாடி
எண்ணத் தேனில் ஈயாய் விழுந்து
மோகக் கடலில் மூழ்கித் தவித்து
காம சுகத்தால் காலங் கழித்து
நரகில் விழுந்து நலமின்றித் தவிக்கின்றாள்
இதுவரை சொன்னேன் இன்னும் கேளாய்
வேரில் தொங்கும் கனியாய் அவளும்
அறுந்து விழுந்தால் அணுகுவர் பலரும்
அலரின் பழியும் அவளைக் கொல்லுமே
காதல் தலைவியைக் காப்பதுன் கடன்
எரிந்து கொண்டிருக்கும் தலைவியை அணைத்து
தாலியை கொடுத்து வேலியாய் நின்றிடுக
சரஸ்வதிராசேந்திரன்
Comments
No photo description available.
Boost this post to reach up to 408 more pe

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக