வெள்ளி, 10 மார்ச், 2023

பிரம்படி பட்ட பரமன்

 பிரம்படி பட்ட பரமன்

வைகை நதியின் வெள்ளப் பெருக்கு
மதுரை நகரை அலைக்கழிக்க அணை
கரை உடைத்து சுவர்கள் சாய்ந்தால்
ஊருக்குள்ளே வெள்ளம் வரும் நிலை
அமைச்சரை அழைத்து வீட்டுக்கு ஒருவர்
அவசியம் வரணும் என்றே ஆணையிட
கரை அடைக்க கடுகியே வந்தனர்
கடமையைச் செய்ய கூட்டாக மக்கள்
வாரிசு இல்லா வயதான வந்திக்கிழவி
வந்துதவி செய்ய முடியாமல் வேதனையுற
மண்வெட்டியுடன் மதுரைச் சிவனே வந்து
மண்சுமந்தால் பிட்டெனக்கு தருவாயா கேட்க
கூலியாக பிட்டைக் கொடுத்தாள் வந்தி
கூத்தாடிச் சிவனோ களிப்புடன் உண்டான்
உண்ட மயக்கத்தால் உறக்கம் தழுவ
கண்களை மூடிக் களைப்பில் தூங்கினான்
அரைகுறை வேலை செய்து பயமின்றி
நிறைவுடன் தூங்கும் நிம்மதி இளைஞனை
கண்ட வேந்தன் கொண்டான் சினமே
கம்பை எடுத்து காட்டமாய் அடித்தான்
என்னே விந்தை எல்லோர் முதுகிலும்
மன்னனின் பிரம்படி மின்னலாய் ஓட
மன்னனின் முதுகிலும் மார்க்கமாய் தாக்கம்
மனம் விதிர்த்து மலைத்தவன் விழிக்க
மறைந்தான் மறையவன் மண்ணை விட்டு
பறைசாற்றி நின்ற பரம்பொருள் பரமன்
கூலியாளாய் வந்தது கூத்தனே என்றுணர்ந்து
நீலனை பணிந்து நிறைவாய் வணங்கினான்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக