நண்பனுக்கு
எண்ணம் செயல்
எல்லாவற்றிலும் ஒத்தககருத்து
இருவருக்கும்
அந்த ஒற்றுமை தான்
நம்மை பிணைத்ததோ?
வேலை நிமித்தம்
வேறு வேறாய் பிரிந்தாலும்
நம்சந்திப்புகளும்
உரையாடலும் நலம்
விசாரிப்புகளும் நலமாகவே
நடந்துக்கொண்டிருப்பதைப்
பார்த்து பொறாமைப்பட்டவர்களும்
உண்டுதானே
குடும்ப சாகரத்தில்
குழப்பங்களும் வேதனைகளும்
சோதனைகளும்
ஏற்படும்போது கூட
ஒருவருக்கொருவர் ஆறுதலும்
உதவிகளுமாய். இருந்திருக்கிறோம்
வாழ்வின் எல்லையில் நின்றாலும்
பழைய நினைவுகளைப் பேசிக்
கொண்டுதானேஇருக்கிறோம்
இன்றைய நிலையைப் பற்றிப்
பேச என்ன இருக்கிறது
அடுத்துக் கெடுப்பதும்
சொத்துக்காக அண்ணன் தம்பி
அடித்துக்கொள்வதும்
சிறுவர்கள் எல்லாம் போதைக்கு அடிமையாவதும்
பதவி ஆசையில் போட்டுத் தள்ளும் வதும்
கல்விக்கூடமெல்லாம்
காமக்கூடமானதையும் பேசவே
நாகூசுதே
அதைப் பேசி என்ன ஆகப்போகிறது?
எத்தனையோ சோதனைகளிலும்
வேதனைகளிலும்
நேர்மை தவறாது மதுவைத் தொடாது வாழ்ந்திருக்கிறோம்
என்பதே பெருமை தானே நண்பா
அடுத்த ஜென்மத்திலும்
நாம் நல்ல நண்பர்களாகவே
பிறப்போம் சரிதானே
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக