துரோணர்
----------------------
கங்கைக் கரையில் பரத்துவாசர் தவமியற்றி
மங்கை கிருதாசினியெனும் யுவதிகண்டு
பாத்திரத்தில் பாலகனாய் சனித்தார் துரோணருமே
வரமாகக் கிடைத்த பரசுராமரிடம்
படைப் பயிற்சியும்
தரமாகப் பயின்றார்
தந்தையிடம்
பல கலைகளையும்
துருபதன் மன்னன் ஆள்கையில் தூயநட்பால்
தருவதாகச் சொன்னான் உனக்குபாதிநாடென
கிருபியினை மணந்து அசவத்தாமனை மகனாய்ப் பெற்றார்
வறுமை வந்திட பசுவேண்டச் சென்றார்
சிறுமையுற்ற துருபதனோ சொல்பிறழ
சினமுற்று உன்னை வென்று வீழ்த்துவேன்
சூளுரைத்துக் குலைந்த நெஞ்சுடன் இல்லமேகினார்
அத்தினாபுரம் அடைந்த துரோணர் பயிற்சி
அளிக்கும் குருவானார் அரச குமாரர்களுக்கு
குரு தட்சணையாக துருபதனை
இழுத்துவர ஆணையிட்டார்
விசயனும் போரில் துருபதனைவென்றான்
வென்ற நாட்டின் பாதியை துருபதனுக்கே மீட்டளிக்க
அவமானப்பட்ட துருபதன்
துரோணரைக் கொல்லத்
திட்டமிட்டுதன் மகனை
அவரிடமே பயிற்சிக்கு அனுப்ப
துரோணர் தன்னைக் கொல்ல வந்தவனுக்கே பயிற்சியளித்தார்
பாரதப்போர் விடுமரின்பின் பதவிதர. ஏற்றார்
பதின்மூன்றாம்நாள் போரில் அபிமன்யுவிடம் தோற்றார்
பதினான்காம் நாள் போரில்
அசுவத்தாமன் இறந்தான்
என்ற பொய்யுரைக் கேட்டு புத்திர
சோகத்தில் தனையிழந்து தியானத்தில் அமர்ந்தார்
இறையே இறைய இறைஞ்சி சரணம்
இறையிடம் சேர்ந்தார் இனிதாய்
துரோணர்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக