வெள்ளி, 10 மார்ச், 2023

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. குறள்...1229

 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.
குறள்...1229
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கனிந்த காதல் கைத்தலம் பற்றியது
பனியாய் உருகி பாசத்தில் திளைத்தது
இனிமை கொண்டு இல்லறம்
நடந்தது
தனம்வழி. கண்டிட தலைவியைப் பிரிய
கனமாய். ஆனது காதலி
மனமும்
மாலை நோயும் மங்கையைப் பற்றியது
ஆலைக் கரும்பாய் ஆனது
நெஞ்சம்
சோலைக். குயிலின் சோடியைப்
பார்த்ததும்
சோகம். நெஞ்சில் சூழ்ந்து
கொண்டது
பசலைப். படர்ந்து பருவம்
குலைந்தது
வசமே விரகம் வாட்டி
எடுத்தது
மாலையிட்ட வன் இல்லா மாலை ஏன் வருது
மெய்யெல்லாம்.துடிக்குதுமென்மனம் பதறுது
கடினமாம் காமக்கலம் ஓட்ட
வல்லேன்
கடந்திட. வாழ்கடல் அவன்
வேண்டுமே
மடங்காத மனத்தை மாற்றிட இயலுமோ தோழி?
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக