வெள்ளி, 10 மார்ச், 2023

தேயும் நிலவும் வளரும் நினைவும்

 தேயும் நிலவும் வளரும் நினைவும்

*************************"*************
நிலவின்தேய்வும் வளர்ச்சியும்
நம்பார்வைக்குள்ளே
தோன்றுவதை சொல்வது
உலகின் கதையிலே
வான்வழி பூகோளம்
வையகக் காட்சியிலே
நிலவென்ன தேய்ந்தா போகும்
பாடுவார்
கவிஞர்கள் கற்பனைக்கு நிலவு
வழக்கில் நீதியில்லை
முதலென்ன முடிவென்ன அது கேள்விக்குள்ளே
உண்மை அன்பு என்றும் தேய்வதில்லை
பெண்ணின் காதல் முடிவதில்லை
வளர்வதற்கு
நினைவுகள் மட்டும் நீங்காத வடுதான்
தொலைவில் சென்றாலும் அது
மாறுவதில்லை
பகல் போல் நிலவென்று பகர்வான்
பாலாய் காயுது நிலவென் பான்
கவிதைக்கு பொய்யழகு என்று மெய்ப்பிப்பான்
தேங்கிய நீரில் எட்டிப் பார்க்குது நிலவு
மூடிய ஆசைதட்டி எழுப்பியது என்னை
தீராத காதலோடு கரை தொடும்
அலை கடலாக உன்முன் நானும்
நினைவுக்கு தேய்வில்லை வளர்ச்சி மட்டுமே
நினைவின் அடுக்குகளில் நீங்காது இருக்கும்
நிசமாகாவிட்டாலும் நிழலாகவாவது அவளும் நானும்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக