சிறுபுறம் கவையின் நன்றே
ஒருபுறம். மகவின் பசியினைப் போக்க
சிறுபுறம் கவையின னன்றே காதலின்
மறுபுறம் ஒளிபொருந்திய நுதலை
அரிவையின் பின்புற. முதுகை முயங்கினன்
மனதை மயக்கிய மன்னனின் நிலையால்
உள்ளும் புறமும் உடனுணர்ந்து கொண்டவள்
இருபுறம் இசையும் இல்லறத்தின் இயல்பாய்
மண்ணின் பண்பால் பெண்மைத் திறந்தது
இருவரின் பசிக்கும் மாரியாய்ப்
பொழிந்தாள்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக