வெள்ளி, 10 மார்ச், 2023

குறள்மொழி. இன்பம் தொடியொடு தோணெகிழ நோவல் அவரைக் கொடியரெனக் கூறல் நொந்து

 குறள்மொழி. இன்பம்

தொடியொடு தோணெகிழ நோவல் அவரைக் கொடியரெனக் கூறல் நொந்து
காதலைச் சொல்லிக் கடிமணம் புரிந்தவன்
வேதனை தரவில்லை வேண்டு மென்றே
பொருள்வியன் பால் புறப்பட்டு போனவன்
திரும்பி. வர தாமதம் தான்
அதற்காக அவரை குற்றம் சொல்லாதீர்
கூடிக் களித்தவர் அருகில் இல்லாததால்
வாடிப் போவது வாடிக்கை தானே
துணை இல்லாத போது உணவுண்ண
இணைக்கு மனம் வருமோ சொல்வீர்
உணவில்லாத உடலில் செழுமை ஏது
தோள்வளை துவண்டு கைவளை கழலுது
கவலையில் உடலும் மனமும் தளர்ந்தது
இது தற்காலிக பிரிவே என்றாலும்
உரக்கப் பேசுது ஊரும் வம்பு
இரக்க மில்லாமல் அவரை கொடியவரென்று
இதனைக் கேட்டு எந்தன் நெஞ்சில்
வேதனை சூழுது துயரும் பெருகுதுதோழி
அவரை குற்றம் சொல்வதை
என்னால் தாங்க முடியவில்லை சென்றவன் வருவான்
சேர்ந்திட என்னை
என்னைப் பிரிந்தவர் கொடியவர்
இல்லை
உண்மை அவர் நல்லவர் அறிவீர்
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக