உ வே சாமினாத ஐயர்
வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் சிற்றூரில்
வேங்கடசுப்பையர் சரஸ்வதியின் திருமகனார் உ வே சு
மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்று
ஊர்பெயரையும் தந்தைபெயரையும் முன் வைத்து
கூறும் மதிநுட்ப கொள்கைபடி வாழ்ந்தார்
நாடிச் சென்றார் நற்றமிழ் பழஞ்சுவடிகளை
தேடி எடுத்து தமிழை உயர்த்தினார்
அவரின்றி அகநானூற்றுக்கும் புறநானூற்றுக்கும் வேறுபாடுயறியோம்
அரியசேவைக்காக அவரின் முயற்சிகள் தாராளம்
அவர் பட்ட சிரமங்களோ ஏராளம்
சிற்றி லக்கியங்களை பதிப்பித்து யளித்தார்
சீவக சிந்தாமணியை சீர்பட தொகுத்து
மணிமேகலைச் சுவடிகளை மாண்புறச் செய்தார்
தமிழைக் காத்தே தலைமுறைக்குத் தந்ததால்
தமிழ்த் தாத்தாவென்னும் தனிப்புகழ் பெற்றார்
தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றியப் பங்களிப்பால்
மதிப்புறு முனைவர் பட்டம் மட்டுமல்ல
மகாமகோபாத்தியாய தக்க்ஷிண கலாநிதிபட்டம் பெற்றார்
இயற்கையெய்தும்வரை இடையறாது இலக்கியப் பணிசெய்தார்
தமிழ் உள்ளவரை அவர்புகழ் வாழும்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக