வெள்ளி, 10 மார்ச், 2023

நபிகள் நாயகத்தின் மேன்மைமிகு வரலாற்றை

 நபிகள் நாயகத்தின் மேன்மைமிகு வரலாற்றை

நயமாய் பாடி வைத்தார் உமறுப்புலவர்
சீறாப்புராண மெனும் சிறப்பான காப்பியத்தில்
உருவிலும் உருவாய் கருவிலும் கருவாய்
அருளும் அமைப்பாய் அதனுள் இருப்பாய்
இருப்பவன் ஒருவன் அவனே இறைவன்
அருவமாய் நிற்கும் உருவை வணங்கு
உரைத்திடும் உண்மைப் பொருள துவே
நோன்பு தவம் புரிந்து நேர்வழியில்
வேண்டி நல்லதை பெறுவாய் நாளும்
குருவின் வேதம் அதுவே உணர்க
மலராய் மணமாய் மறைகளை ஓதி
உலகை காக்கும் இறைவனை இருத்திடுமனதில்
முக்காலம் அறிந்து மூவாசை மறந்து
மறுமையே இல்லாதான் மலரடி போற்றினால்
மீள்பிறவி கிடையா சுவர்க்கப் பேற்றை அடையலாம்
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Admin
Saraswathi Rajendran சொல்ல வேண்டியதைச் சொல்லிச் சிறக்கும் கவிதை பேரழகு வாழ்த்துகள் கவிஞரே!
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக