வெள்ளி, 10 மார்ச், 2023

ஒண்ணுதல் செய்தது கண்டு!.... ************************** குறள் -1240 ***************** "கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே/ ஒண்ணுதல் செய்தது கண்டு//"

 பைந்தமிழ் பூம்புனல்

*************************
குறள் மொழி இன்பம் - 106
********************************
ஒண்ணுதல் செய்தது கண்டு!....
**************************
குறள் -1240
*****************
"கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே/
ஒண்ணுதல் செய்தது கண்டு//"
###################
இருமனம் கலந்து
திருமணம் பூண்டு
இன்பத்தின் மணத்தில்
இடையறாது குளித்தனர்
இல்லறம் இயற்றி
இனிப்புடன் வாழ்ந்திட
நல்லறக் கணவனவன்
நன்பொருள் தேடிட
கடமை உணர்வுடன்
காதலியைப்‌. பிரிய
பிரிவின் தாக்கத்தால்
பாரியை நெற்றியில்
பசலைப் பூத்தது
கசந்தது வாழ்க்கை
கடினமாய் போனது
வசந்தம் இல்லா
வளமின்றி தேய்ந்தது
நினைவில் வந்தது
முன்னிரவு நடந்தது
அணைப்பு இன்றி
அனலானது உடலும்
இணையில்லா இரவு
இறுக்கத்தைத் தந்திட
தலைவனும் அங்கே
தனித்தே தவித்திட
விரைந்திட மனமும்
விழைந்தது வெகுவாய்
விரகம் தனித்திட
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக