வெப்பம்
************
புரட்டாசி வெப்பம்
புரட்டிஎடுத்தது
வீட்டுக்குள்ளும் வெப்பம்
அதிகமாய் பரவ
வார்த்தைகளிலும்
அதன் உக்கிரம் வெளிப்பட
எதையோ உடைத்து
வாங்கிக் கட்டிக் கொண்டான்
ஆறுவயது மகன்
ஆறுதல்தேடி
என்னிடம் வந்தான்
தாய்மீது வைத்தான்
குற்றச்சாட்டை வேறொன்றும்
இல்லை
தெரியாமல் அம்மா பச்சை மிளகாயை
கடிச்சிட்டா அந்த காரம்
தாங்கமுடியலை அப்பப் பார்த்து
நீ பிளேட்டை உடைச்சியா
அதான் அடிச்சிட்டா
அம்மாதானே விடு
போபோ விளையாடு
பச்சை மண்ணும் அதை நம்பி
அம்மா மேல்
அனுதாபம் பட்டு வலி மறந்து
விளையாடப்போனது
மாதம் மூன்றுநாள்
பொழியும் ரசாயனமாற்றத்தால்
ஏற்படும் மனைவியின் வெப்ப உபாதைப்பற்றி
விவரம் அறியாமகனிடம்
எப்படி விளக்கம் தர
முடியும் தந்தையால்
நாட்கள் நகர அவள்
வதனம் வெப்பம் குறைந்து குளிரந்துபுன்னகைப் பூ பூக்கும் என்பது
உணர்ந்தவருக்கேப்புரியும்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக