பா (*வை ) நயம்
நாணத்தால் சிவந்த நளின கண்கள்
நகை தவழ்ந்து நனைந்திடும் இதழ்கள்
மான் கொடுத்த மருட் பார்வை
தங்கத்தில் வைரம் தைத்தது போல்
சிந்தை யினிக்கும் செந்தமிழ் சிலை
வாள் தோற்கும் விழி யழகு
கன்னக் குழியும் கன்னல் மொழியும்
செறிவுளக் கூந்தலும் தெறிவொளிர்பற்களும்
நெறிசெலுங் கால்களும் அறிவுளப் பாவையே
முந்தி வரும் முத்துச் சிரிப்பினை
சிந்தி வரும் சித்திரப் பெண்ணின்
மோகன அழகினை மோனை எதுகையுடன்
கவிபாட கவிஞனுக்கும் வார்த்தை சிக்கவில்லை
பனியில் நனைந்த மலரின் அழகைப்
பார்க்க அருமையே பாவை அவளையே
கவிதைப் புனலில் கலையும் கொண்டவன்
கவிஞன்றோ
சரஸ்வதிராசேந்திரன்
செல்வா ஆறுமுகம்
Saraswathi Rajendran
நாணத்தால் சிவந்த நளின கண்கள்
நகை தவழ்ந்து நனைந்திடும் இதழ்கள்
மான் கொடுத்த மருட் பார்வை
தங்கத்தில் வைரம் தைத்தது போல்
அங்க மெலாம் அழகு சொட்டும்
சிந்தை யினிக்கும் செந்தமிழ் சிலை
அடடா -
இப்பவே அவுங்கள நானும் பாக்கணும் போல இருக்கே...
செறிவுளக் கூந்தலும் தெறிவொளிர்பற்களும்
நெறிசெலுங் கால்களும் அறிவுளப் பாவையே
முந்தி வரும் முத்துச் சிரிப்பினை
சிந்தி வரும் சித்திரப் பெண்ணின்
மோகன அழகினை மோனை எதுகையுடன்
கவிபாட கவிஞனுக்கும் வார்த்தை சிக்கவில்லை
சிக்கவில்லை
சிக்கவில்லை
அப்புடின்னு சொல்லிப்புட்டு ஒங்களுக்கு மட்டும் சிக்கிருச்சே எப்புடி..?
பனியில் நனைந்த மலரின் அழகைப்
பார்க்க அருமையே பாவை அவளையே
கவிதைப் புனலில் கலையும் கொண்டவன்
கவிஞனன்றோ...
கவிதைப் புனலில் கலையும் கொண்டவன் - அடடா...
கவிதைப் புனலில் கலையும் கொண்டவன் - சிறப்பான வரிகள்..
வாழ்த்துகள்
கவிஞரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக