கூர்ம அவதாரம்
திருமால் எடுத்த அவதாரம் பத்து
உருவில் கூர்ம அவதாரம் இரண்டாவது
இந்திரன் ஐராவதத்தின் மீதேறி ஊர்வலம்
பரமன் மாலையை இந்திரனுக்கு ஈய
செருக்கேறிக் கிடந்த இந்திரன் அலட்சியப்படுத்தினான்
மூன்று உலகமும் நீயும் பாழாகட்டும்
முனிவர் இட்டசாபத்தால் மூவுலகமும் இருண்டது
உழல்கின்ற துன்பம் உடனடியாய் நீங்க
இந்திரனும் தேவாதியரும் பிரம்மனிடம் முறையிட
மந்திரமலையை மத்தாகவும் வாசுகியை கயிறாகக்கொண்டு
திருப்பாற்கடலை அசுரர்களுடன் சேர்ந்து கடைவாய்
திருமால் தானும் உதவுகிறேன் எனச்சொல்ல
மலையைக் கடைய பாரம் தாங்காது
மூழ்கிய மலையை ஆமை வடிவமெடுத்து
முதுகில் தாங்கி திருமால் காப்பாற்ற
அருந்தவப் பேற்றால் அறிந்தான் இந்திரன்
நலமான யாவும் நயமிகுந் தாகியதை
ஆடி அடங்கியது அகந்தை மனவேரும்
ஆதிமூலவனின் கூர்ம அவதார மூர்த்தியை
அனுதினமும் தியானம் செய்பவருக்கு சகலசம்பத்தும் சம்பவிக்கும்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக