மடலூர்தல் யாமத்து முள்ளுவேன்
மன்றபடலொல்லா பேதைக்கென் கண் (1136) குறள்
*****************************************
இனிப்பை சுற்றும் எறும்பை போலுன்
என்னைத் துயரத்துக்கு ஆளாக்கிய அவளை
காண முடியாமல் கலங்கித் தவிக்கிறேன்
பேதையின் பிரிவால் பேதலித்து
நிற்கிறேன்
காதல் நோய் காமத் துயரேற்றுதே
அல்லும் பகலும் அந்த சுகமே
அல்லல் படுத்தி அனலாய் வாட்டுதே
மன்றம் வாரா மங்கைஅவளால்
தென்றல் கூட தீயாய்ச் சுடுகின்றதே
மங்கை அவளின் அருகாமை இன்றி
ஈங்கென் விழிகள் உறங்க. மறுக்குது
தாங்கொணாத துயரம் மனதை
வதைப்பதால்
மன்னவன் நானும் மடலேற துணிந்திட்டேன்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக