வெள்ளி, 10 மார்ச், 2023

கைந்நிலை

 கைந்நிலை

பதினெண் கீழ்க்கணக்கு தொகுப்பில் காணும்
பன்னிரெண்டு நூல்களும் நல்லொழுக்க பதிவாம்
கைந்நிலை அகத்துறை அழகுற காட்டி
தந்நிலை மாறா தகுநிலை கொண்ட
நயத்துடன் புலமைச் செறிவு கொண்டது
நல்லூர் காவிதியார் புல்லங்காடனார் பாடல்கள்
சொல்லழகும் பொருளழகும் கவியழகும் கற்பனைவளமும்
எல்லாம் நலஞ்சூழம் அற்புத பாடல்களின்
களஞ்சியம் கைந்நிலை என்றால் மிகையில்லை
களம் புகுவோம் களித்து மகிழ்வோம்
பாலைத் திணையிலே பால்பொழியும் பசுக்கள்/
வேலைக் கையிலேந்திய வேடரைக் கண்டு/
மிரண்டு குரலெழுப்பி அஞ்சி ஓடும்
காட்டு விலங்குகளும் கடிதாய் மறையும்
பொருள்வயிற் பிரிந்த பாலைவழி சென்ற
தலைவன் தவிப்பில் ஏங்கிய தலைவியை
பல்லி ஒலிகேட்டு தேற்றுவாள் தோழி
பாலைவழி சென்றவன் பாங்குடன் வருவானென்று
என் கண்ணே காதலியே உன்னை
எந்நிலை வரினும் பிரியேன் நானே
மருத நிலத்தின் மன்னன் சொன்னான்
பிரிந்தான் இந்நாட் போதும் வாரான்
கள்ளம் படிந்த கற்புநிலை இல்லாதவன்
சோலையில் மேய்ந்திடும் நாரையே கூடிக்களித்த
காலை நினை ஒருகாலும் பிரியேன் பிரிந்தால்
உயிர் தரியேன் என்றவனின் சொல்லை
நம்பினேன் என்துயர் நீபோய் கேட்பாயாக
குறுகிய நெஞ்சன் கல்மனம் கொண்டவனிடம்
உருகும் என்நிலை போய் எடுரைப்பாய் நாரையே
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Admin
Saraswathi Rajendran காவியக் களஞ்சியம் இது என்பதனை மனதிற் கொண்டு தீட்டியக் கவிதை இது!
அளவெடுத்த சீர்களும் சொற்களும் அபிநயம் சேர்க்கின்றன;
இலக்கிய நயம் காட்டும் பத்திகளும் பேரழகு!
கவிதை மிகச் சிறப்பு வாழ்த்துகள் கவிஞரே!
No photo description available.
Boost this post to reach up to 6 more people if you spend ₹578.
All reactions:
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக