ஞாயிறு, 12 மார்ச், 2023

கள்வனும் அவனே கடவனும் அவனே

 கள்வனும் அவனே கடவனும் அவனே

களவொழுக்க நெறியோடு
காதலுள்ள தலைவனோ
இதயம் ஈர்த்தவளின்
இல்லம். தேடிவர
தலைவியோ எதிர்நின்ற
தோழியிடம் தன்நிலை
எடுத்துஅவனறிய. துரைத்த
இனிய. நல்லுரை
இதயம். முழுதும்
எனக்கே கொடுத்து
என்மனம் கவர்ந்த
கள்வனும் அவனே
நெஞ்சில் இனிக்கும்
நினைவுகள் தந்து
கொஞ்சிப் பேசியே
களவு கொண்டவன்
கடிதாய் வருவேனென
கூறிச் சென்றவன்
மறந்தானோ மங்கையெனை
காரிகை அவனை நம்பி
காவலின்றி ஏங்குகிறேனே
கன்னியின் நிலைஅறியானோ?
நலிந்தன. மென்தோள்கள்
நங்கையென் நிலைகண்டு
கலங்கிய வளையல்கள்
கழன்று விழுந்தன
பொலிவிழந்துப் பூத்தன
பாவையென் விழிகள்
என் நிலை அவன்பால்
யார் போய்உரைப்பார்?
சூளுரைத்தவன்அவன்
அதை காப்பாற்றுவதும்
அவன்கடமைஇல்லையா
அதை அவனேஅறிந்து
நான் படும் துன்பத்தைக்
கடக்க தெப்பம்ஆகவேண்டும்
கடிமணம் புரிய வேண்டும்
தோழியிடம்சொல்வதுபோல
துணைவனுக்குணர்த்தினாள்
கள்வனும் அவனே கடவனும் அவனே புணைவனும் அவனே
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக