எந்தை நாட்டீரே
எந்தை நாட்டீரே என்ன நடக்கிறதிங்கே
சிந்தியுங்கள் சிறப்பாக இருந்த நாட்டை
சொந்தம் கொண்டாடி சொத்து சேர்த்தீர்
புறம்பாக நின்று வரம்புமீறிய செயல்களால்
அறம் தவறி அராசகம் செய்கிறீர்
சொந்த மதியால் சுயமாக சம்பாதித்தாலும்
அந்த நிலத்தையும் ஆட்டையைப் போடுகிறீர்
அன்பின் சிறப்பால் ஆண்ட சமூகத்தை
வம்பாய் மாற்றி வன்முறைக்கு வித்திட்டீர்
வருந்தி திருந்திடும் வாழ்க்கையே இல்லையின்று
தருமகுணம் அற்ற மிருகமான மனிதரால்
அன்பின் சிறப்பால் அனைத்தும் உறவாகி
பண்பால் நிறைந்த பாரதத்தை நீவீர்
பழுதாக்கி குள்ளத் தனத்தால் குளறுபடியாக்கினீர்
துட்டர்கள் செய்கின்ற சூழ்ச்சிகள் தூரமாகவேண்டும்
நட்டங்கள் வராமல் நலன்களை நாடுபெறவேண்டும்
பட்டங்கள் திறமைக்கே வழங்கப்படல் வேண்டும்
நாட்டை நினைத்து கேட்டைக் களையவேண்டும்
வெட்ட வெளியான நிலங்கள் காக்கப்படவேண்டும்
தீர்த்திட வேண்டும் தீயோர் செயல்களை
திளைத்திட வேண்டும் நல்தொழில் வளம்
பார்த்திட வேண்டும் விவசாயிகள் வாழ்வை
பகைத்திட வேண்டும் பாதகம் செய்வோரை
நாடும் வீடும் வளமை பெறவே
நல்லவர் ஆட்சி நடந்திட வேண்டும்
எந்தை நாட்டை முன்னிலைக்கு கொண்டுவர
சிந்தையில் கொண்டு நல்லறிஞரைத் தேர்ந்தெடுப்போம்
சரஸ்வதிராசேந்திரன்
Keshvadas
SaraswathiRajendran
கவிதையின் தொடக்கத்தில் தூக்கிய சாட்டையை
கடைசிப் பத்திக்கு முந்தையப் பத்தி வரை கீழே வைக்க வில்லை கவிஞர்!
ஆவேசம் ஆக்ரோஷம் தலைக்கேறிய வரிகள் உத்வேகம் தருகின்றன;, கடைசி இருபத்திகளில் கூறிய அறிவுரைப்படி மக்கள் செயல்பட்டால் எந்த நாடும் உருப்படுமே!
கவிதை மிகவும் சிறப்பு!
வாழ்த்துகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக