வெள்ளி, 10 மார்ச், 2023

*உள்ளார் கொல்லோ தோழி*

 *உள்ளார் கொல்லோ தோழி*

நிறைவுடன் வாழ நிறைபொருள் காண
உறைவிடம் விட்டு வெளியூர் செல்ல
புரிந்தும் பேதை மனமோ சஞ்சலமுற்று
பிரிவின் ஆற்றாமையால் புலம்பித் தவித்தாள்
என்னை எடுத்து தன்னைக் கொடுத்தவன்
தன்னை நினைப்பானா என்னை மறப்பானோ
இருந்தும் இல்லாமல் இறந்த நிலையில்
வருந்தும் என்னை மகிழ்விக்க வருவானோ
தன்னையே தந்தவன் தஞ்சமென அர்ப்பணித்தவன்
உன்னை நினைக்காமல் இருப்பானோ தோழி
மன்னவன் காணும் ஆண்பல்லி ஒன்று
தன்னருகில் வருமாறு பெண்பல்லியை அழைப்பதை
தலைவன் பார்த்தால் தன்நிலை
உணர்வான்
உன்னை எரிக்கும்
உணர்வுகளின் சலனம்
தன்னையும் எரிக்கும் என்பதை உணர்வான்
ஆசைத் தீயை‌ அணைக்க முடியாமல்
காசுப் பொருளுடன் விரைவில் வருவான்
கலக்கம் வேண்டாம் கணவன் வருவான்
கண்மணி உந்தன் கவலை தீர்க்க
உயர்ந்த உள்ளத்துடன் உணர உணர்த்தினாள்தோழி
சரஸ்வதிராசேந்திரன்
May be an image of 3 people and text that says 'இவங்கிய்பிருதாவானவம் இலக்கிய இன்பம் உள்ளார் கொல்லோ லோ தோழி சிறப்பு வெற்றியாளர் வெற்றி கவி கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக