ஆண்டவனின் புதிய உலகம்
*******************************
இரக்கக் குணமும்
ஈயும் நல்மனமும்
இயல்பாய் இருந்தது
அரக்கக் குணம்
மட்டுமே இன்று
அசலாகிப் போனது
விதைத்த அன்புவிதை
முளைக்க வில்லை
தப்புவிதைகளே எங்கும்
தழைத்து நின்றது
பகடைக் காயாய்
உன்னை உருட்டும்
பாதகர்களைப் பார்த்து
பதைத்துத் தானே
புதிய உலகம் படைக்கப்
புறப்பட்டு விட்டாய்
நன்றோ பிழையோ
நானே அல்லலுறுகிறேன்
சிறுமை கள் ஆடும்
உலகில் செம்மைகள்
சிறந்து விளங்கவும்
வாட்டும் வறுமையை
வதைத்திடும் நோயினை
ஓட்டிட வேண்டும்
தீவிர வாதம்
தீய்ந்தே போகணும்
பறவைகள் போலே
வேற்றுமை இல்லாதிருக்கணும்
உண்மை ஒன்றே
உலகென ஒப்புக்கொள்ளச்செய்
வழிவழி மாந்தர்கள்
வழிதவறி போகாதிருக்கணும்
பெண்மையை பெருமையாய்
போற்ற வேண்டும்
மனிதர்கள் மனதில்
மதவெறி போகவேண்டும்
நல்ல நிகழ்வுகள்
நாளும் செயல்படவேண்டும்
நாட்டையும் வீட்டையும்
நலமுறச் செய்ய
நல்லத் தலைவர்கள்
நாடாள வேண்டும்
புதிய உலகத்தில்
இவையெல்லாம் இருத்திடு
இனிய ஆண்டவரே
சரஸ்வதிராசேந்திரன்
SelvaArumugam
Saraswathi Rajendran
விதைத்த அன்பு விதை
முளைக்க வில்லை
தப்புவிதைகளே எங்கும்
தழைத்து நின்றது... அருமை கவிஞரே...
வழிவழி மாந்தர்கள்
வழிதவறி போகாதிருக்கணும்
பெண்மையை பெருமையாய்
போற்ற வேண்டும்
மனிதர்கள் மனதில்
மதவெறி போகவேண்டும் - நல்ல கோரிக்கைகள்...
இறைவன் பரிசீலித்தானா....?
நல்லத் தலைவர்கள்
நாடாள வேண்டும் - இங்கதான் கொஞ்சம் இடிக்குது...
நல்லத் தலைவர்கள் - எங்கயாச்சும் அமைய வாழ்த்துகள் கவிஞரே...
போவும்போது என்னையும் கூட்டிகினு போங்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக