பெருந்தவப் பேறு
பாரதப் போரினில் பதினேழாம் நாளன்று
பார்த்தனை ஏவிவிட்டான் கண்ணன் அம்பைவிட
உடலெங்கும் கூரம்பால் உதிரம் கொட்ட
களத்தில் புதையுண்ட தேரோடு கர்ணன்
நிலத்தில் அதில் சாய்ந்து கிடந்தான்
தருமம்தான் தலை காக்கிறது என்றுணர்ந்து
தருணம் இதுவென கண்ணன் வேடமணிந்து
அந்தணனாய் சென்று யாசகம் கேட்டான்
அந்திமத்தில் வந்துள்ளீர் ஈவதிற்கு ஏதுமில்லையே
காய்த்த மரம் கனிந்து முடித்து
ஓய்ந்த நிலையில் நீர் வந்துள்ளீர்
உமக்குக் கொடுக்க என்ன இருக்கிறது
எம்மிடம் ஐயகோ என் செய்வேன் ?
ஈகைநலம் கொண்ட ஈரநெஞ்சுடைய நீயா
ஈவதற்கு ஒன்றுமில்லை என்கிறாய் கர்ணா
புரிந்த தர்மம் எல்லாம் தந்திடுபோதும்
பதம்பெற நின்று உவப்பேன் நான்
சிந்திய ரத்தத்தை சேர்த்து வழிதெடுத்து
செய்த புண்ணியம் அனைத்தையும் தந்திட
கர்ணனின் உள்ளம் கண்டு பூரித்த
கண்ணன் மகிழ்ந்து பேருருவம் காட்டினான்
கண்ணில் நீர்மல்க கைகூப்பி வணங்கி
மண்ணில் பெற்றேன் மாபெரும் பேறு
கண்ணா உன்னால் இன்று நானே
மன்னா மணிவண்ணா எனை ஆட்கொள்வாயே
சரஸ்வதிராசேந்திரன்
Saraswathi Rajendran கவிதை பேரழகு!
சிலபல சொல்லாடல்கள் சிந்தை நின்று உவப்பளிக்கிறது!
காய்த்த மரம் கனிந்து முடித்து ஓய்ந்த நிலையில்
மண்ணில் பெற்றேன் மாபெரும் பேறு
கண்ணா உன்னால் இன்று நானே
ஈகைநலம் கொண்ட ஈர நெஞ்சுடைய நீயா
ஈவதற்கு ஒன்றுமில்லை என்கிறாய் கர்ணா
வாழ்த்துகள் கவிஞரே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக