சனி, 11 மார்ச், 2023

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் கொடிய அரக்கன் இரணியன் கயாதுக்கு அருந்தவப் புதல்வனாய் பிரகலாதன் பிறந்தான் தான் பெற்ற சாகா வரத்தால் இரணியன் சாக அடித்தான் மக்களை கொடும்ஆட்சியால் நானே கடவுள் தன்னையே வணங்க வேண்டும் தானெனும்அகந்தையால் தருக்கியே நடந்து ஆட்டுவித்தான் அனைவரையுமே நற்பேறாய் அவன் மைந்தன் கருவகத்தே நாரதர் நாராயண மந்திரம் ஓதிட பிள்ளையும் அதனைப் பின்பற்றி உருவேற்றினான் போதித்தார் சுக்கிராச்சாரியார் இரணியன்தான் கடவுளென்று பிரகலாதனோ நாராயணந்தான் மூலக் கடவுளென்றான் அரக்கன் சினத்தால் மகனை அடக்க. நினைக்க அரங்கனைப் பற்றிய பக்தியில் அடங்கவில்லைமகனும் மகனென்றும் பாராது மடமையால் மல்லுக்கு நின்றான் மடங்கவில்ல பிரகலாதன் அசரவில்லை தன் பக்தியால் கொல்லவும் துணிந்தான் இரணியன் மகனை வெல்லமுடியாமல் தோல்வியால் துவண்டுபோனான் தீராகோபத்தின் உச்சத்தில் நின்று கேட்டான் எங்கடா காட்டு உன் கடவுளையென்று கூற துணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் மகன் சொல்ல மதியிழந்த இரணியன் தூணைக் கதையால் பிளக்க உள்ளிருந்த நரசிம்மமூர்த்தி கடுங்கோபத்தால் இரணியன் பெற்ற சாகாவரங்கள் பலிக்காத வகையில் வதம் செய்தார் நாராயண மந்த்ரம் நாளும் நாமோதிட நாம் பெறுவோம் பேரின்பம் நன்மையுடன் சரஸ்வதிராசேந்திரன் Comments Kesavadhas Saraswathi Rajendran கவிதை மிகவும் அழகு! வாழ்த்துகள் கவிஞரே!

 தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

கொடிய அரக்கன் இரணியன் கயாதுக்கு அருந்தவப்
புதல்வனாய் பிரகலாதன் பிறந்தான்
தான் பெற்ற சாகா வரத்தால் இரணியன்
சாக அடித்தான் மக்களை கொடும்ஆட்சியால்
நானே கடவுள் தன்னையே வணங்க வேண்டும்
தானெனும்அகந்தையால்
தருக்கியே நடந்து
ஆட்டுவித்தான் அனைவரையுமே
நற்பேறாய் அவன் மைந்தன் கருவகத்தே
நாரதர் நாராயண மந்திரம் ஓதிட
பிள்ளையும் அதனைப் பின்பற்றி உருவேற்றினான்
போதித்தார் சுக்கிராச்சாரியார் இரணியன்தான் கடவுளென்று
பிரகலாதனோ நாராயணந்தான் மூலக் கடவுளென்றான்
அரக்கன் சினத்தால் மகனை அடக்க. நினைக்க
அரங்கனைப் பற்றிய பக்தியில் அடங்கவில்லைமகனும்
மகனென்றும் பாராது மடமையால்
மல்லுக்கு நின்றான்
மடங்கவில்ல பிரகலாதன் அசரவில்லை தன் பக்தியால்
கொல்லவும் துணிந்தான் இரணியன் மகனை
வெல்லமுடியாமல் தோல்வியால் துவண்டுபோனான்
தீராகோபத்தின் உச்சத்தில் நின்று கேட்டான்
எங்கடா காட்டு உன் கடவுளையென்று கூற
துணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
மகன் சொல்ல மதியிழந்த இரணியன்
தூணைக் கதையால் பிளக்க உள்ளிருந்த
நரசிம்மமூர்த்தி கடுங்கோபத்தால் இரணியன் பெற்ற
சாகாவரங்கள் பலிக்காத வகையில் வதம் செய்தார்
நாராயண மந்த்ரம் நாளும் நாமோதிட
நாம் பெறுவோம் பேரின்பம் நன்மையுடன்
சரஸ்வதிராசேந்திரன்
Comments
Kesavadhas
Saraswathi Rajendran கவிதை மிகவும் அழகு!
வாழ்த்துகள் கவிஞரே!
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக