குறள்: 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
************************************
நல்லறம் காண விழைந்த தலைவன்
பொருள்தேட பூவையின் இதழில்
முத்தமிட்டு
திரும்பி வரும்வரை நினைவில்
கொள்
பாவையவள் விழிகளில் பரவிய
நீரை
பதமாய் துடைத்த தலைவன் ஆறுதல்
படுத்தி அனுமதியுடன் அயலகம்
சென்றான்
பிரிவில் தவித்தாள் தலைவனைப் பிரிந்தவள்
அரிவையின் உடலும் அனலாய்
கொதிக்க
விழிகள் இரண்டும் இமைக்க மறுக்க
வழிகாணாது விரகத்தில் துடித்த
தலைவியைத் தேற்றினாள் தோழி
அரவணைத்தே
உன்னில் பலபேர் நிலையும் இதுவே
மண்ணில் பெண்ணாக பிறந்தவர்தம் வாழ்விலது
பிரிவுகள் உண்டு சேர்தலும் இயல்பு
இதற்கேன் வருத்தம்
நிரந்தரப் பிரிவில்லையிது நிம்மதி கொள்
என்னதான் நீ சொன்னாலும் என்னின்
மன்னவன் இல்லாத பொழுதுகள்
வேதனை தருதே
பிரிவெனும் தீயில் புகைந்து விடுவேனோ
விரும்பியே போனாலும் விரைவில்
வராவிட்டால்
விடுதலை ஆகிடுமே உயிர்ப்பறவை உடலைவிட்டு
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக