வெள்ளி, 10 மார்ச், 2023

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்

 

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்
கண்ணில் கலந்து காதலில் விழுந்து
இதயம் ஒன்றி இல்லறம் ஏற்றவன்
இரவும் பகலும் இணை பிரியாதவன்
நாளைய வாழ்க்கையை நலமுடன் செலுத்த
பொருளை ஈட்டி விரைவில் வருவேன்
விடைபெற்றுப் போனவன் என்னை மறந்தானே
உள்ளம் இழந்து உடலுந் துவண்டு
ஊண்துயில் இன்றி ஊர்ந்தன நாட்கள்
அல்லும் பகலும் அயரா துழன்று
எண்ணாதன எல்லாம் எண்ணி உருகுகிறேன்
நிழல் தொடர்ந்து காலடியில் தங்குவதுபோல்
நினைவில் புகுந்து நிம்மதியை குலைக்கிறானே
தேடாமல் உள்ளவரை தேடியே அலையுதே
தேடிக் கொடுத்து உய்விக்கச் செய்யாமல்
மரித்திடும் வேதனை அறியாது தேற்றுகிறாய்
புலனடங்கா சலன மனது மறுகுதே
எற்றென உரைப்பேன் எந்தவிப்பைத் தோழி
சரஸ்வதிராசேந்திரன்
கவிஞர் முகிலை பாஸ்ரீ
Saraswathi Rajendran
நல்லதோர் குறள் மொழி இன்பம்!
வாழ்த்துகள் கவியே!
எனினும்
ஓரசைச் சீர்களையும் நாலசைச் சீர்களையும் தவிர்ப்பது கவிதைக்கு அழகு சேர்க்கும்!
May be an image of ‎4 people and ‎text that says '‎பைந்தமிழப் பூம்புனல் குறள்மொழி இன்பம். 133 எற்றென்னை உற்ற துயர் நிறுவனர் கவிஞர் மீராபாநீ நடுவர் கவிஞர் முகிலை பாஸ்ரீ தலைவர் கவிஞர் கேசவதாஸ் எற்றென்னை யா שר உா்ற வெற்றியாளர் கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்‎'‎‎

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக