வியாழன், 28 ஏப்ரல், 2016

நிலா முற்றம் --27 -4-2016

கவிஞர்களிடம் சில கேள்விகள்..
பகுதிக்கு இந்த வாரம் இரு கவிஞர்களை(கவிதாயினிகள்) தேர்வு செய்து (வனிஷாசிறீ,சரஸ்வதி ராஜேந்திரன்) ஒரே மாதிரியான கேள்விகளைத் தொடுத்தோம்
இருவருமே பதில்களை அசத்தலாக கூறியிருக்கிறார்கள்,இதோ...
−நிலாமுற்றத் தலைவர் மாறன்
மற்றும் நிர்வாகிகள்..
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
கவிஞரிடம் சில
கேள்விகள்*******
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
1)சமுதாயத்தில் எத்தகைய கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது?ஏன்?
2)சிந்தனைத்தூண்டச் செய்வது மரபுக்கவிதைகளா?புதுக்கவிதைகளா?
3)புதுக்கவிதைக்கான இலக்கணம்?
4)மரபுக்கவிதைகள் இளைஞர்களிடையே நாட்டம் குறைந்துள்ளதாக
கருதுகிறீர்களா?அல்லது விரும்பப்படுகிறதா?
5)ஹைக்கூ,லிமரைக்கூ வேறுபடுத்துங்களேன்..
6)புதினம், சிறுகதை,புதுக்கவிதை,
சமூகசிந்தனையில் அதிக பங்கு எது?
7)தங்களை கவர்ந்த கவிஞர்?(நிலாமுற்றத்திலும் இருக்கலாம்)
8)நீங்கள் எழுதிய கவிதையில் உங்களை கவர்ந்தது?ஏன்?
9)முகநூல்களில் கவிதை குழுமங்கள் அதிகரிப்பது ஆரோக்கியமான விசயமாக கருதுகிறீர்களா?
பெண்களுக்கான பாதுகாப்பு முகநூல்களி்ல்கிடைக்கிறதா?.
10)நிலாமுற்றம் பற்றி தங்கள் கருத்து?
பதில்கள்
**********
1..புதுக்கவிதைதான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது ஏனெனில் அதுதான்
பரவலாக இருக்கிறது
2மரபுக்கவிதை புதுக்கவிதை என்ற பாகுபாடெல்லாம்கிடையாது கருத்தாழ
மிக்கவையாகவும் தரமாகவும் சிந்தனையை தூண்டுபவையாகவும் இருக்கவேண்டும் அது மரபுக்கவிதையாகவுமிருக்கலாம் புதுக்கவிதையாகவும் இருக்கலாம்
3 இலக்கணம் யாப்பு .எதுகை எதுவுமில்லாத கருத்துக்கள் மட்டுமேகொண்ட புதிய முறையே புதுக்கவிதை
4 மரபுக்கவிதைவின் நாட்டம் இளைஞர்களிடம் குறைந்ததாக சொல்லமுடியாது தற்பொழுது நிறைய இளைஞர்கள் மரபுக்கவிதை எழுத
பயிற்சி எடுத்துக்கொண்டு எழுகிறார்கள் இதை நீங்கள் முக நூலிலேயே
பார்க்கலாம்
5ஹைக்கூவிற்கான விளக்கங்கள் அதிகமாக உள்ளன பிரபல இலக்கிய இதழ்களில் ஹைக்கூ வேறுபடுகிறது ஒவ்வொரு குழுமத்திலும்ஒவ்வொரு மாதிரி வேறுபடுகிறது மூன்று வரிகளில் யாரும் யோசிக்காதகோணத்தில் நாம் பார்க்கும் காட்சியே ஹைக்கூ என்று தட்ஷன் சொன்னபடிதான் நான் எழுதுகிறேன்
லிமரைகூ 5அடிகளில் நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் எழுதப்படும் கவிதை வடிவமே லிமரைக்கூ
6 புதினம் படிக்க இந்த அவசர உலகத்தில் யாருக்கும் நேரமில்லை புதுக்கவிதை சிறுகதை படிப்பவர்களே அதிகம் சமூகச்சிந்தனையில் அதிகம் பங்கு வகிப்பது சிறுகதையே சமயச்சொற்பொழிவார்களும் சரி
மேடைப்பேச்சாளர்களும் சரி குட்டிக்கதைகள் வழியாகத்தான் சமூக சிந்தனைகளை விதைக்கிறார்கள்
7 என்னைக்கவர்ந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களே காதலாகட்டும் சமூக சிந்தனையாகட்டும் தத்துவக்கவியாகட்டும் அவருக்கு ஈடு அவரே
8 தமிழின்பால் அதிக ஈடுபாடு உள்ளதால் தமிழ் பற்றி நான்
எழுதிய ‘’அங்கம் வகிக்கும் அரிய தமிழ் ‘’ என்ற கவிதையே
9 காலத்தின் கட்டாயம் இதையாரும் கட்டுப்படுத்த முடியாது
தரமானதாக இருந்தால் நிலைத்து நிற்கும் இதை பொருட்படுத்த வேண்டியதில்லை. .
பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு குறைவுதான் அவரவர் கட்டுப்பாடோடு
நடந்தால் கஷ்டமில்லை அளவோடு இருந்தால் எல்லாம் நல்லதுதான்
10 நிலாமுற்றம் ஒரு தரமான தமிழ் வளர்க்கும் முற்றம் அதில் ஏதும் ஐயமில்லை கட்டுப்பாடோடு சீரமைக்கபட்டிருக்கிறது
இங்கே சொல்லப்பட்டவை என் தனிபட்ட கருத்தே ..

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

வல்லமை புகைப்படபோட்டி----59


வல்லமை 59வது புகைப்பட போட்டியில் என் கவிதையை சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த மேகலா ராமமூர்த்திக்கும்,வல்லமை குழுவிற்கும் மனமார்ந்த நன்றி
இவ்வாரத்தின் சிறந்த கவிஞர்
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற வலிநிறைந்த பாடங்கள்தாம் எத்தனை எத்தனை! அதிலொன்று… காதலில் ஏற்படும் தோல்வி. காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கக் காரிகையொருத்தி காலம் பார்த்திருக்க, அந்தக் காதலனோ அவளைக் கைகழுவிவிட்டுச் சென்றால் அவள் மனம் சிதறிப் போகாதோ?
சேலையணிந்த சோலையாய்க் காட்சிதரும் பாவையின் காதல் கானல்நீராய்ப் போனதை, ஆசைகள் நீராசையாய் ஆனதைப் பேசும் கவிதை…
அமுதென்று நினைத்து
நஞ்சை அருந்தினேன்
மலரென்று எண்ணி
முட்களைச் சூடினேன்
ஆசை அழைத்த வழி சென்றேன்
நேசமுடன் பேசிய காதலன்
பாதி வழியில் விட்டுப்போனான்
பாழும் மனது குழம்பி, புலம்பிப்
பல நேரங்களில் சஞ்சலித்தது
என் காதல் ஜெயிக்காமல்
போனதற்குக் காரணம் இறைவா நீ
இதோஇந்த அலைகள் ஓடிவந்து
பாறையில் மோதிச் சிதறியதுபோல்
என் ஆசைகளும் சிதறிப்போயின…
கடற்கரையில் ஆரம்பித்த காதல்
கடற்கரையிலேயே கரைந்துபோனது
ஆசையை மட்டும் நம்பிப்போனால் நிலைக்காது வாழ்க்கைப்படகு என்பது புரிந்தது
நான் கவலை மறந்து சிரிக்கிறேன்
கடற்கரையில் நின்று கவிதை பாடுகிறேன்இன்று!
கடற்கரையில் நின்று சோககீதமிசைக்கும் சுந்தரியின் மனத்தைக் கவினுறக் காட்டியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

15- 4--2016 ஒரு கவிஞனின் கனவு --அவசர ஊர்தி கவிதை

வணக்கம் உறவுகளே

நேற்றைய (15.04.2016) போட்டிக் கவியின் வெற்றியாளர் #saraswathi #rajendhiran சரஸ்வதி ராஜேந்திரன் அவர்களுக்கும் கலந்துகொண்ட அனைந்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் .

15-4-2016 அவசர ஊர்தி

பிறப்பும் இறப்பும்
இறைவன் வகுத்த நியதி
இடைப்பட்ட காலத்தில்மனிதர்கள்

இடர்படும் நேரத்தில்உதவுவதே
அவசர ஊர்திகள்,,
அடிபட்டவர்களுக்கு மட்டுமல்ல
அவசரமானவகளுக்குத்தேவையான
உடலுறுப்புகளையும்காலத்தில்கொண்டு சென்று
உதவும் ஆபத் பாந்தவன் அவசர ஊர்தி
இருந்த இடத்திலிருந்தே கால் செய்தால்
இருப்பிடம் வந்து இடர்ப்படும் உயிரை
ஏந்தி சென்று மனித உயிர்களை பாதுகாக்க
உத்தவாதம் தரும் உயிர் வண்டி
அவசர ஊர்தியின் அவசியம் உணர்ந்து
அலட்சியம் காட்டாமல்அமைதியாய் வழி விடுங்கள்

புதன், 6 ஏப்ரல், 2016

தடாகம் இலக்கிய வட்டம் மார்ச் மாத போட்டிகவிதை 2016

வாக்கு இல்லா நாக்கு  

ஜக்கம்மா வேறில்லை
திக்கம்மா என்று
வாக்கு இல்லா
நாக்கிற்குள் நாம்
ஐக்கியமாகிவிட்டோம்
கடன் கேட்போனிலிருந்து
உடன் இருப்பவன் வரை
வாக்குத் தவறாதவன் எனகூறியே
வாக்குத் தவறுபவன்தான் அதிகம்
நாக்கிலே தேனைத்தடவி
நயவஞ்சகமாய் பேசி
நங்கைகளை காதல் வலையில்
சிக்கவைக்கும் காளையர்
சிக்கியதும் கை கழுவீட்டு
சாக்கு சொல்வார் இஷ்டத்திற்கு
சொல்லும் திறத்தாலே
வெல்லும் வகை கற்றோன்
தங்க நகைகடைக்காரன்
எங்க கடை தங்கம் ஒரிஜினல் என்று
தங்கத்தில் ஈயம் சேர்த்திருப்பான்
வாக்கு இல்லா நாக்குக்காரன்
வானத்தையே வில்லாக வடிப்பான்
தானமாக கொடுப்பான் இலவசத்தை
வாக்கு கிடைத்ததும் வழிமறந்துடுவான்
நாக்கில் நரம்பில்லாத அரசியல் வாதி
அன்பான  நண்பன் கூடசில நேரம்
வம்பாக    மாறும்  சூழ்  நிலை
அவ்சரத்தேவைக்காக அழைத்தால்
கைபேசியில் பொய் பேசுவான்
வெளியூர் போய்க்கொண்டிருப்பதாக
வீட்டு வாசலில் நின்றுகொண்டே
வேதனைதான் யாரைச்சொல்ல யாரைவிட?
இனி உலக வாக்கு இல்லா நாக்கு நாள்
கொண்டாடும் நிலை வந்தாலும் வியப்பில்லை