வெள்ளி, 10 மார்ச், 2023

இயற்பகை நாயனார்

 இயற்பகை நாயனார்

அநபாய சோழனது
கொடி நிழலிலே
பற்றற்ற பரமஞானியாம்
இயற்கைமுறை ஒதுக்கிய
இயற்பகையார் மனைவியுடன்
இறைவனிடம் ஈடில்லா
பக்தி சிரத்தையுடன்
வாழ்ந்து வருங்காலை
அவரது பக்தியை
சோதிக்க சிவனார்
அந்தணர் உருவில்
இயற்பகையார் இல்லமேக
அடியாரைப் பேணுவதையே
அறமாகக் கருதிய
இயற்பகையார் வணங்க
இல்லை எனாது
ஈயும் பண்புடையவனே
தாரத்தைத் தன்னுடன்
அனுப்பிவைக்க வேண்ட
அடிமையின் கடமையே
அதுதானே எனக்கூறி
மனையாளை அழைக்க
மறுபேச்சின்றி பதியின்
ஆணைக்கு அடிபணிந்து
வணங்கி நிற்க
ஊரெல்லைத் தாண்ட
உதவிடுவாய்என
சிவனடியார் சொல்ல
நிறம்மாறிப் போகாமல்
நற்குணம் மேவிநடந்திட
ஊரும் மற்றவரும்
சூழ்ந்து தூற்ற
போரிட்டு பரமனைத்தொடர
பக்தியை மெச்சிய
பரமனும் உமையோடு
நற்காட்சித் தந்திட
நாயனாரும் பத்தினியும்
பணிந்து வணங்கினரே
சரஸ்வதிராசேந்திரன்
Kesavadhas
Saraswathi Rajendran ஒரே வாக்கியத்தில் கவிதையை எழுதி முடித்துள்ளார் கவிஞர்!
இதுவும் ஒரு சாதனையே சாகசமே!
கவிதை நனிசிறப்பு வாழ்த்துகள் கவிஞரே!
May be a cartoon of 3 people and text that says 'இலைகிய் விழுந்தக்ல் காவியக் களஞ்சியம் இயற்பகை நாயனார் சிறப்பு வெற்றியாளர் கவிஞர் இயற்பகை இயற்பகைநாயனார் நாயனார் யற்பகை இயற்பகைநாயனார் நாயனார் தமலவர் சரஸ்வதி ராஜேந்திரன்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக