ஒரு வேண்டுகோள்
எதிர்கால இளைஞர்களே
உங்களுக்கொரு வேண்டுகோள்
பெருமை மிக்க செயல்களையே செய்திடுங்கள்
அருமை பெரியோர் அறிவுறைப்படி நடந்திடுங்கள்
மந்த அறிவால் மற்றவரை மதியாதிருக்காதீர்
புந்தியில் தெளிவு டன் புன்மை தவிருங்கள்
சிந்தித்து செயல்பட்டால் வாழ்வெல்லாம் சீராகும்
எந்த நிலைமையிலும் நேர்மை தவறாதீர்கள்
மண் இல்லை என்றால் மரமேது
பெண் இன்றி உலகில் வாழ்வேது
பெண்ணை என்றும் பெருமை படுத்துங்கள்
நெஞ்சம் நிமிர்ந்து லஞ்சம் தவி
ருங்கள்
அன்பால் அனைவரையும் வென்று நீங்கள்
என்றும் எல்லோரின் இதயம் கவர்ந்திடுங்க:ள்
சினத்தைக் கொன்று குணத்தை சேருங்கள்
மனதை வென்று மனிதனாய் வாழுங்கள்
இதுவே உங்களிடம் எந்தன் வேண்டுகோள்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக