ஆயுதம் தரிப்பதா அன்பை ஏற்பதா
ஆயுதம் தரிப்பின்
ஓயாது மனமே
மூர்க்கக் குணமும்
ஆட்படுத்தி ஆண்டிட
அறிவை இழந்து
வெறிச்செயல் கூடி
விரயங்கள் சேர்த்தார்
நெறியற்ற செயலால்
நெடுந்துயர் சேர்ந்தது
நடைமுறை வாழ்வை
படம்பிடித்து காட்டியது
ஆயுதம் தரித்தவரால்
அழிவைக் கண்டோம்
சடலங்களை வைத்து
சரித்திரமா படைக்கப்
போகிறார் பேராசைக்காரகள்
தன்னலமும் பணத்தாசையும்
வன்செயலுக்கு வழிவகுக்கின்றது
கொலைகளைச் செய்வதையே
கொள்கையாய் கொண்டோர்
தலைமுறை காணாதவர்
அன்பான வாழ்க்கையே
அமைதியை தரும்
பிழையற்றப் பண்பும்
புரிசெயல் அன்பும்
செழுமையின் அம்சம்
முழுமையின் வம்சம்
அன்பின் ஆக்கம்
அதன்வழி காக்கும்
பட்ட அனுபவம்
புத்தன் புகன்றது
கற்றுத் தெளிவுற
கற்பித்தனர் ஞானியர்
அன்பதனை ஏற்கச்சொல்லி
மதங்களை ஆய்ந்து
மனிதம் வளர்த்தே
அதர்மம் அழிப்போம்
ஆன்றோர் வழியில்
ஆசையை அகற்றுவோம்
அன்பை விதைப்போம்
ஆயுதம் தவிர்ப்போம்
உலகின் படைப்பில்
உயர்ந்த படைப்பு
உலவும் மனிதன்
கலகம் எதற்கு
மனிதனுக்குள்ளே ஏன்
இனவெறி பணவெறி
ஆயுதம் வேண்டும்
அச்சுறுத்த மட்டுமே
அழிக்க வல்ல
வள்ளலார் சொன்ன
அன்பையே ஏற்போம்
அகிலம் காப்போம்
சரஸ்வதிராசேந்திரன்
செல்வா ஆறுமுகம்
Admin
Saraswathi Rajendran உலகின் படைப்பில்
உயர்ந்த படைப்பு
உலவும் மனிதன்
கலகம் எதற்கு
மனிதனுக்குள்ளே ஏன்
இனவெறி பணவெறி
ஆயுதம் வேண்டும்
அச்சுறுத்த மட்டுமே
அழிக்க வல்ல
வள்ளலார் சொன்ன
அன்பையே ஏற்போம்
அகிலம் காப்போம் - அழகாக சொன்னீர் கவிஞரே.
ஆயுதம் வேண்டும்
அச்சுறுத்த மட்டுமே - சிறப்பு
வள்ளலார் சொன்ன
அன்பையே ஏற்போம்
அகிலம் காப்போம் - சிறப்பான நெறி.
வாழ்த்துகள் கவிஞரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக