புதன், 8 மார்ச், 2017

தமிழமுது கவிச்சாரல்---22=12-2016 வைத்தியம் வேண்டும் வைத்தியனுக்கு-

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 22--12--16 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_வைத்தியம்_வேண்டும்_வைத்தியனுக்கு_பணமென்ற_மாயையில்
தொடங்கவும் (((((((((((((((((((
#பிணியில்லா_மனிதனாய்_பிறப்பதும்_வரமே...
முடிக்கவும்))))))))))))))))
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#கவிஞர்_கவிச்சிகரம் _பெ .தி .சுகுமார் பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வைத்தியம்_வேண்டும்_வைத்தியனுக்கு_பணமென்ற_மாயையில் தொடங்கவும் (((((((((((((((((((
***
பிணியில்லா_மனிதனாய்_பிறப்பதும்_வரமே முடிக்கவும்))))))))))))))))
வைத்தியம் வேண்டும் வைத்தியனுக்கு பணமென்ற மாயையில் மூழ்கி
மக்கள் சேவை மகேசன் சேவை என்பதை மறந்து தன்
மக்கள் நலனே பெரிதெனக் கொண்டு
புதுப் புது நோய்களைச் சொல்லி
பொருள் விலை பட்டியல் போட்டு
பிடுங்கும் வரை ஆதாயமாய் கொண்டு
தலைவலி என்று போனால் கூட
தலை முதல் கால்வரை பரிசீலனை
தான் வாங்கிய தொழி நுட்ப கருவிகளை பயன் படுத்த
பின் மளிகை பொருட்களாய் மருந்துகள் அட்டவணை
அதுவும் போதா தென்று வேறொரு
மருத்துவருக்கு சிபாரிசு கடிதம் தரகு பெற
மனிதாபிமான மில்லா மனிதரெல்லாம்
மருத்துவச் சேவைக்கு வந்தால் மக்கள் வாழ்வு என்னாகும் ?
விரல் விட் டெண்ணக் கூடிய ஒரு சிலர் இந்த
அணியில் சேராமல் மருத்துவ சேவை செய்கிறார்ஆனாலும் ;இன்று
பிணி இல்லா மனிதனாய் பிறப்பதும் வரமே
சரஸ்வதிராசேந்திரன்

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--படக்கவிதை-போட்டி

படக்கவிதைப் போட்டி சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்
ஆணாய் பெண்ணாய் ஆக்கிய இறைவன்
அவசரத்தில் கவனப் பிழை செய்தான்
வாலறு பல்லியாய் மனது பதறினாலும்
வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் வாழ்க்கையை
குறையை எண்ணி குமுறி கிடக்காமல்
நிறையாய் வாழ்ந்து நிமிர்வோம் வா
ஊனம் ஒருவருக்கு தடையில்லை
உழைக்க மனம் இருந்தால் அடையலாம் வெற்றி
கை இழந்த நீயும் கால் இழந்த நானும்
மன உறுதியை ஊன்று கோலாக்கி
உழைக்கும் வர்க்கத்தின் துணையோடு
பிழைக்கும் கலையை கற்போம்
சரஸ்வதிராசேந்திரன்

தமிழமுது கவிச்சாரல் 18-12=2016--சீச்சீ இந்த பழம் புளிக்கும்

வேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் :நேற்றைய 18--12--16 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_.#நீ_கொடுத்த_அல்வா_கதைநான்_சொல்லவா
தொடரவும்))))))))))
.#ச்சீ_ச்சீ_இந்தப்பழம்_புளிக்கும்
முடிக்கவும்))))))))))
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#தமிழமுது_கவிச்சாரல்_கவிதாயினி_கவிச்சிற்பி_மதுரா பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#நீ_கொடுத்த_அல்வா_கதைநான்_சொல்லவா
தொடரவும்))))))))))
.#ச்சீ_ச்சீ_இந்தப்பழம்_புளிக்கும்
நீ கொடுத்த அல்வா கதை நான் சொல்லவா
நீ தினம் கொடுத்த காதல் மனுவை என்
மனம் மறுக்க முடியாமல் ஏற்றேன்
பாழும் உன் சூது தெரியாமல் நான்
பகடையாகி உருட்டப் பட்டேன் காதலில்
என்னை உன் பாதுகாவலனாகவும்
உன் மெய்க் காப்பாளனாகவும் உனக்கு
பணம் எடுக்கும் இயந்திரமாகவும் என்னை
பயன் படுத்தி தூக்கி எறிந்து விட்டாய்
இருப்பினும் உன் முகத்தில் திராவகம் ஊற்றவில்லை
பிறப்பில் நல்ல தாய்க்குப் பிறந்ததால்
உன் அற்ப காதலுக்காக இனியும் உனை நினைத்து
என் சொற்ப காலத்தை பாழாக்கிக் கொள்வேன்
என ஒருபோதும் கனவு காணாதே பெண்ணே
உன் சுயரூபம் தெரிந்த உடனேயே நானும்
ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என உதறிவிட்டேன் உன்னை
சரஸ்வதிராசேந்திரன்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்
— with Usharani and 2 others.

18-12-2016 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--எரிதழல் கொண்டுவா

வெற்றி பெற்ற கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
தலைமை நிர்வாகி
ந. பாண்டியராஜன்
எரிதழல் கொண்டுவா 
நியாயம் தெரிந்தும்
குருடாக உள்ள கொடூர நிலைமை உலகில்
எதிர்ப்பைத் தெரிவிக்க நாட்டுடைமைகளை
வெறிச்செயலால் விரயங்கள்செய்கிறார்
பெண்கள் விரும்பாவிட்டாலும்
கொலைகள் செய்வதை கொள்கையாய் கொள்கின்றார்
நெறியற்ற வாழ்வில் தறி கெட்டுப்போகிறார்
இயற்கையை அழித்துசெயற்கையை விரும்புவோரை
அரசியல்வாதிகள் எல்லாம் அநியாயவாதியாகிறார்
ஊழலை தைரியமாக செய்யும் உலுத்தர்கள்
தீண்டாமையை கொண்டாடுவோரை
மனித குணம் அற்ற மிருக குணம் கொண்டோரை
பதவிக்காக படு கொலை செய்வோரை கண்டு
கலங்கிய நீர் போல் கதிகலங்குது தினமும் நாட்டு நடப்பு
பூனைக்கு மணி கட்ட ஆள் தேடுவதை விட்டு
பொது மக்களே திரளுங்கள் இனியொரு விதி செய்வோம்
எரிதழல் கொண்டுவா எரித்திடுவோம் தீமைகளை
சரஸ்வதி ராசேந்திரன்

13-12-2016 முத்தமிழ் களம்--எனது உயிரே உனக்காக

முத்தமிழ்க்களம்
நட்புறவுகளுக்கு வணக்கம்
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
எமது களத்தில்
13 / 12 / 2016 முதல் 18 / 12 / 2016 வரை
நடைபெற்ற புதுக்கவிதைப் போட்டியின்
முடிவுகள்.
தலைப்பு - எனது உயிரே உனக்காக
வெற்றிவாகை சூடிக்கொள்கிறார்
<><><><><><><><><><><><><><><><><><>
கவிதாயினி . சரஸ்வதி ராசேந்திரன்
<><><><><><><><><><><><><><><><><><>
அவர்களுக்கு
முத்தமிழ்க்களம் குழு
நிர்வாகிகளின் பாராட்டுக்கள்
இவர்களுடன்
உங்கள் கவிப் பிரியன்
எனது உயிரே உனக்காக
நித்தம் உன் வரவுக்காக காத்திருந்து
தத்தளிக்கும் உள்ளமதை கவிதையாக
முத்தமிழ்களத்தில்வந்துமுறையிடுகிறேன்
பித்தம் தலைக்கேறி புலம்பி தவிக்கிறேன்
நெஞ்சார உருகி நித்த நித்தம் தேடுகிறேன்
பிஞ்சான என் மனதை பஞ்சாக பறக்க விட்டு
காடான பாதையெல்லாம் கால் கடுக்க நடக்கிறேன்
மேடான மலையில் கூடஏறி தேடுகிறேன்
கோயிலுக்குச் சென்றாலும் குழந்தைகளை பார்த்தாலும்
தாயெனக்கு உன் நினைவுதான் தாவி வருது
நாயினுக்கும் கீழாக நான் அலைகிறேன் உன் நினைவால்
எனது உயிரே உனக்காக நானிருந்தும்
உனது உயிரை கூற்றுவன் கொய்தானே
விடியாத துயர் சூழ்ந்த உலகில் நான்
வீழ்ந்தே நொறுங்கி கிடக்கிறேன் நாளும்
வருவேன் உன்னிடம் விரைவில்
சரஸ்வதிராசேந்திரன்

15-12-2016 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா -- நானா எனக்குள் நானா

இனிய காலை வணக்கம் கவிஞர்களே....
சங்கத் தமிழ் கவிதைப் பூங்காவில் 15.12.2016 அன்று நடைபெற்ற "நானா எனக்குள் நானா" என்ற தலைப்பில் நடைபெற்ற பாரதிதாசன் சான்றிதழ் போட்டியில் நடுவர்களாக கலந்து சிறப்பித்து சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
நடுவர் கவிஞர்
ந.பாண்டியராஜன்
நடுவர் கவிதாயினி
சரோஜினி பாண்டியராஜன்
வெற்றி பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள் சங்கத் தமிழ்க் கவிதை குழுமம்
பாரதிதாசன் சான்றிதழ் போட்டியாளர்
நானா எனக்குள் நானா -தலைப்பு
நானா எனக்குள் நானா இல்லை
யாரோதானா யோசிக்கிறேன்
கூப்பிய கரங்களுக்குள்
கொடுவாளை மறைத்து வைக்கவில்லை
முகவரிக்காக யாரையும்
முகஸ்துதி செய்யவில்லை
சதிகாரர்களின் சூழ்ச்சி வலையின்
அதிகாரத்திற்கு அடி பணிவதில்லை
வாய்மைக்கு ஒருபோதும்
வாய்ப்பூட்டு போடுவதில்லை
நட்புக்கு ஒருபோதும்
ஆப்பு வைப்பதில்லை
சலனமற்ற கண்களும்
சபலமற்ற உள்ளமும் கொண்டிருக்கிறேன்
போர் என்று வந்தபின்
உறவு பார்ப்பதில்லை
இயலாமை காரணமாக விட்டுக்கொடுத்துவிட்டு
தியாகம் என்ற வார்த்தையில் ஒளிந்து
மனம் வெதும்பி நிற்பதில்லை
தனித்தவனாக இருப்பதும் பிறர்
என்னைத் தனித்துப் பார்ப்பதில்கூட
தாழ்வுணர்ச்சி அடைவதில்லை
நாடகம் முடியும் வரை
நானா எனக்குள் நானாய் இருக்கவே விரும்புகிறேன்
சரஸ்வதிராசேந்திரன்

மீண்டும் வருவாயா? ஒரு கவிஞனின் கனவு 13-12-2016

12.12.16 ம் தேதிக்கான போட்டிக்கவிதையின் வெற்றியாளர் கவிஞர் #சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தலைப்பு--மீண்டும் வருவாயா?
மீண்டும் வருவாயா
அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிவிட்டாய்
உச்சத்தில் இருப்போரின்
உருட்டல் மிரட்டலுக்கும்
பதவிக்கும் பணத்துக்கும்
ஆசைப்பட்டு அச்சத்தோடுதான்
அடிமைப்பட்டு கிடக்கிறோம்
ஓடி விளையாடு பாப்பாஎன்றாய்
ஓரமாய் அமர்ந்துகணினியில்தான்
பாதுகாப்பாய் விளையாடுகிறார்கள்
பெண் சுதந்திரம் ஆடைகளில்
கொடிகட்டி பறக்கிறது
சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய்
சாதிசான்றிதழ் இல்லாவிட்டால்
பள்ளியில்சேர்க்கை கிடையாது
தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணேன் என்றாய்
தப்புத் தப்பாய் எழுதுவோரின் செயலால்
தமிழ் படும் பாட்டை என்னவென்று சொல்வோம்
காதல் இல்லையெனில் சாதல்என்றாய்
காதல் கொள்ளாவிட்டால் இங்கு
கொலைதான் ஏராளம்
உன் பாடலின் அர்த்தத்தை இவர்கள்
அனர்த்தமாக்கி கொண்டிருக்கிறார்கள்
மீண்டு வா பாரதி
மீண்டும்வாஎமைகாக்க ............................................................ . சரஸ்வதிராசேந்திரன்