புதன், 8 மார்ச், 2017

மீண்டும் வருவாயா? ஒரு கவிஞனின் கனவு 13-12-2016

12.12.16 ம் தேதிக்கான போட்டிக்கவிதையின் வெற்றியாளர் கவிஞர் #சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தலைப்பு--மீண்டும் வருவாயா?
மீண்டும் வருவாயா
அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிவிட்டாய்
உச்சத்தில் இருப்போரின்
உருட்டல் மிரட்டலுக்கும்
பதவிக்கும் பணத்துக்கும்
ஆசைப்பட்டு அச்சத்தோடுதான்
அடிமைப்பட்டு கிடக்கிறோம்
ஓடி விளையாடு பாப்பாஎன்றாய்
ஓரமாய் அமர்ந்துகணினியில்தான்
பாதுகாப்பாய் விளையாடுகிறார்கள்
பெண் சுதந்திரம் ஆடைகளில்
கொடிகட்டி பறக்கிறது
சாதிகள் இல்லையடி பாப்பா என்றாய்
சாதிசான்றிதழ் இல்லாவிட்டால்
பள்ளியில்சேர்க்கை கிடையாது
தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணேன் என்றாய்
தப்புத் தப்பாய் எழுதுவோரின் செயலால்
தமிழ் படும் பாட்டை என்னவென்று சொல்வோம்
காதல் இல்லையெனில் சாதல்என்றாய்
காதல் கொள்ளாவிட்டால் இங்கு
கொலைதான் ஏராளம்
உன் பாடலின் அர்த்தத்தை இவர்கள்
அனர்த்தமாக்கி கொண்டிருக்கிறார்கள்
மீண்டு வா பாரதி
மீண்டும்வாஎமைகாக்க ............................................................ . சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக