திங்கள், 23 ஜூன், 2014

டிவியில் நான் பெற்ற பரிசுகள்


1 ஏவிஎம் நிம்மதி உங்கள் சாய்ஸ் ---ஆடியோ கேசட்
2விஜய் டிவியில் 'கண்ணாடி கதவுகள் ''விமர்சனத்திற்கு ---- 4 கிராம் தங்க காசு
3ஜெயா டிவியில் ஜாக்பாட் ஹோம் வின்நேர்ஸ் கேள்வி போட்டியில் -----5000 RS பட்டுபுடவை
4 மக்கள் டிவியில் - அரசியல் கேள்விகளுக்கு பதில் போட்டியில் ----- இரண்டு முறை இரண்டு வெள்ளி குங்குமச்சிமிழ்
5 கலைஞர் டிவியில் ''வைர நெஞ்சம் ''போட்டியில் ------500 பெறுமான பான்சி புடவை
6ராஜ் டிவியில் ' புத்தம் புது பாடல் ''போட்டியில் ------- பாரகன் செருப்பு ஒரு ஜோடி
7 ஜெயா டிவி குமுதம் இணைந்து நடத்திய ''அண்ணி''தொடர் பற்றிய விமர்சனத்திற்கு ------
2500 RS பட்டு புடவை ஒன்று
மற்றும்
இதயம் மந்த்ரா கடலை எண்ணெய் பற்றிய சிறந்த அனுபவத்திற்கு ------2500 RS பட்டு புடவை
அவள் விகடன் இதழ் நடத்திய ''தினம் ஒரு மிக்சி '' போட்டியில் ----பிரிமியர் மிக்சி குமுதம் நடத்திய ''பொன்னெழுத்து ''போட்டியில் ------ பவுன் மூக்குத்தி
அவள் விகடன் நடத்திய டிப் கேள்வி போட்டியில் ------1கிராம் தங்க நாணயம்
இதயம் நல்லெண்ணெய் நடத்திய ''இதயம் தொட்ட நல்லவர் ''போட்டியில் --- 500 RS பெருமான காப்பர் பாட்டம் பாத்திரம் மூன்று
இதயம் நல்லெண்ணெய் நடத்திய இதயத்தி பூரி வடை போட்டியில் ------- ராசாத்தி நெய்ட்டி
அவள் விகடன் நடத்திய '' தீபாவளி அனுபவங்கள் ''போட்டியில் -----ஸ்பிரே அயர்ன் பாக்ஸ்
அவள் விகடன் நடத்திய '' வாசகியர் கை மணம் '' போட்டியில் ------- 3ஜார் ப்ரீத்தி மிக்ஸ்யர் கிரைண்டர்
மங்கையர் மலர் நடத்திய '' பண்டிகை ஸ்பெஷல் ''போட்டியில் -----2000 RS பெறுமான சில்க் காட்டேன் புடவை
இவைகளை என் சாதனை என்றோ ,,பெருமைக்காகவோ எழுதவில்லை ,இதை பார்த்தாவது என் பேரக்குழந்தைகள் எல்லாபோட்டிகளிலும் செஸ் பாட்டு ,கதை என்று கலந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் ,,,,,,,,
'
இந்த சிறுவர் பாடல் ’’குழந்தைக் கவிஞர் பாடல் பரம்பரை’’என்ற நூலில் இடம் பெற்றுள்ளது 172 பக்கங்கள் கொண்ட நூலில் என்னையும் சேர்த்து 166 கவிஞர்கள் இடம் பெற்றுள்ளனர், அழ,வள்ளியப்பா பிறந்த நாளான 7-11-2013 அன்று மாலை காரைக்குடி சிங்கர் மகாலில் வெளிடப்பட்டது இந்நூல் . தொகுதி -1 இந்த நூலை சென்னை மணிவாசகர் பதிப்பகம் அழகு மிளிர வெளியிட்டுள்ளது. நன்றி

வம்சம் --தங்க மங்கை--ஏப்ரல் --2014

‘’இதோ பாருங்க , நான் எங்க குடும்பத்தை விட்டுட்டு,என் சொந்த பந்தங்களைவிட்டுட்டு,காதலுக்காக உங்களோடு வந்திருக்கேன் , நீங்க ஒத்த ரூபாய் சம்பாதித்தாலும் எனக்கு கவலையில்லை ,ஆனால் அந்த ஒத்த ரூபாய் நேர்மையாய் சம்பாதித்ததாக இருக்கணும் புரியுதா ?’’வள்ளி சொன்னாள் .
‘’புரியுது வள்ளி , நான் இதுவரை அப்படித்தான் ஆட்டோஓட்டி பிழைக்கிறேன் ,இனியும் அப்படியே இருப்பேன் ‘’ என்று சொன்னவன் தான் வேணு,ஆனால் வள்ளி முழுகாமல் இருக்கிறாள் என்று தெரிந்ததும் வேணு வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள படாத பாடு பட்டான் .பாவம் வ்சதியான குடும்பத்தை சேர்ந்த வள்ளி காதலுக்காக கஷ்ட படக்கூடாது என்று நினைத்தான் வேணு ,உள்ளூரில் ஷேர் ஆட்டோவந்ததிலிருந்து ஆட்டோவிற்கு வருமானம் குறைந்தது
வேறு யாரையும் தெரியாது வேணுவுக்கு ,ரொம்ப குழம்பிப் போய் இருந்தபொழுது தான் அவ்ன் கூட்டாளி கணேசன் வேணுவை ஒரு கட்த்தல் காரனிடம் அறிமுகப்படுத்தினான் .
கடத்தல் காரன் சொல்கிறபடி கேட்டால் பணம் கிடைக்கும் . வேணு அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை வள்ளிக்குத் தெரிந்தால் கோபப்படுவாளென்று .ஆனால் கூட்டாளி ஏதேதோ சொல்லி அவனை மடக்கிவிட்டான் .பணத்தைப் பார்த்ததும் வேணுவும் மாறிப்போனான்.
வள்ளிக்கும் தனக்கும் பிறக்கப்போகும் குழந்தையின் எதிகாலத்தை எண்ணி ,கணேசன் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்
இது வள்ளிக்குத்தெரிந்தால் ....அவள் ஏற்பாளா ? ஒரே மனப்போராட்டம் வேணுவுக்கு வெகு சீக்கிரமே கடத்தல் காரனிடமிருந்து தகவல் வர ,ஓடினான் வேணு .
‘’இதோ பார் வேணு , நான் சொல்ற இடத்திலே, நான் சொல்ற அடையாளத் திலே ஒர்வன் கையில் பெட்டியுடன் நிற்பான் . நீன் இரட்டை விரலை காட்டினால் அவ்ன் உன்னிடம் பெட்டியை சேர்ப்பான் .அதை போலீசில் மாட்டாமல் சாமர்த்தியமாக என்னிடம் சேர்த்தால் உடனே யே ஐயாயிரம் ரூபாய் கொடுப்பேன் என்ன சொல்றே?’’
‘’சரி கணேஷ் ,போலீசில் மாட்டிக்கொண்டால் ..?’’
‘’மாட்டிக்கொண்டாலும் என் பெயரை சொல்லக்கூடாது ,மாட்டாம வர்றதுதான் உன் சாமர்த்தியம் உ.ன் மனைவி
வேறு முழுகாமலிருப்பதாக கேள்வி பட்டேன் .இந்த சமயத்தில் நல்ல ஆரோக்கியமான உணவு தர வேண்டாமா ? நான் உனக்கு நிறைய பண உதவி செய்கிறேன் பயப்படாதே ‘’
வேணுவும் தயங்கி தயங்கி பின் ஒத்துக்கொண்டு பெட்டியை சேர வேண்டிய இடத்தில் சேர்த்து பணத்தையும் பெற்றுக்கொண்டான் . அவ்ன் மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் மிதக்க ,வள்ளிக்காக ஹார்லிக்ஸ் ,பழங்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்க் விரைந்தான் .
வீடு பூட்டியிருக்க ,பக்கத்து வீட்டில் விசாரித்தான் .
வள்ளி மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக சொல்ல செக் அப்பிற்கு சென்றிருப்பாள் என நினைத்து ஆட்டோவில் விரைந்தான் .
மருத்துவ மனையில் படுத்திருந்த வள்ளியைப் பார்த்ததும் வேணு மிரண்டு போனான் .’’வள்ளி என்னாச்சுடா உனக்கு?’’
வள்ளி கண்களில் நீர் பெருக மவுனமாக இருந்தாள் .
அங்கு வந்த நர்ஸ் சொன்னாள் .
‘’அவங்க கர்ப்பம் கலைஞ்சுடுச்சு ‘’
‘’வள்ளி,, நர்ஸ் சொல்றது உண்மையா? எப்படி வள்ளி ?’’
துடித்தான் வேணு .
‘’இதப்பாருய்யா ,உன்னை காதலிச்ச குற்றத்திற்காக என் குடும்பத்தை விட்டு ஓடிவந்தேன் நான் ..ஏன்? நீனல்லவன் ,னேர்மையான்வன் என்று தானே? ஆனால் நீ பணத்திற்காக ,வசதிக்காக பாவமான செயலை செய்ய துணிஞ்சுட்டேன்னு நினைக்கும்போது என் மனசே உடைஞ்சுடுச்சுய்யா , நல்ல குடும்பத்தில் பிறந்தவன்னு சொல்றதுதான்யா எனக்கு பெருமை ,அப்படி நேர்மையில்லாத உனக்கு ஏன்யா குழந்தை ? கடத்தல்காரனுக்கு ,பிறந்த பிள்ளையின்னு நம்ம வம்சத்தையே தப்பா பேசறதை கேட்கணுமா நான் ? வேண்டாம்யா அதான் நம்ம குழந்தையை நானே அழிச்சுட்டு இங்க வந்து படுத்துட்டேன் ,இப்படியொரு வம்சம் தழைக்கணுமா?உன்னை கட்டிக்கிட்ட பாவத்துக்காக பிள்ளையை கொன்னுட்டு நானும் பாவத்துக்கு ஆளாயிட்டேன்
உயிரோடு இருந்தா அந்த குழந்தையும் மற்றவர்கள் கேலிக்கு ஆளாகி என்னையும் வசை பாடுமே ..அதான் ....’’கேவி கேவி அழுதாள் வள்ளி .
‘’ஐயோ ,,,வள்ளி .. நான் ஏன் இப்படி புத்தி கெட்டு போனேன் ? என்னை மன்னிச்சுடு வள்ளி ,...எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம் நான் திருந்த .அதற்காக,..பிள்ளையை...
கொன்றிருக்க வேண்டாம் ... எத்தனை கன வோடு வந்தேன் ..’அழுது புலம்பினான் என்னதான் அழுது புரண்டாலும் மரித்த கரு வருமா?
சரஸ்வதி ராசேந்திரன் --தங்க மங்கை ==ஏப்ரல் =2014

விரைந்து வா முருகா சண்முக கவசம் ஆன்மீக இதழ் --2014


வேலும் மயிலும் கொண்டவா
சேவற் கொடியுடன் வந்தவா
தணிகை மலையில் அமர்ந்தவா
கனிமயில் வள்ளியை மணந்தவா
அப்பனுக்கு பாடம்தந்த சுப்பனே
அழகர்மலை கோயில் அழகனே
சித்தத்தில் விழலையோ என் குரல்
தத்தளிக்கும் பக்த்ர்க்குத்துணை உன் அருள்

நம்பிக்கை வைத்துன்னைப் பூசித்தேன்
நாளுமுன் அருளுக்கு யாசித்தேன்
பச்சைமலை முருகனே பறந்துவா
பக்தர்குறை தீர்த்திடவே விரைந்துவா
சண்முக கவசம்-மாத இதழ்---- ஏப்ரல் 2014
ஆன்மீக இதழ்

திருட்டு


தன் எதிரில் வந்து நின்ற பெண்ணை ப்
பார்த்து ‘’என்ன வேணும் உஙளுக்கு ‘?
இன்ஸ்பெக்டர் கேட்டார்
‘’சார் என் கைபையை ஒருவன் பிக்பாக்கெட் அடிச்சிட்டான் சார் ,அதிலே ஆயிரம் ரூபாய் பணமும் ,என் atm கார்டும் இருக்கு சார் ,அதை கண்டுபிடிச்சு கொடுஙக சார் ‘’ ருத்ரா படபடப்போடு சொன்னாள்
‘’எந்த ஏரியாவில நடந்தது ?’’
‘’ தெற்கு வீதியில் சார் ‘’
‘’எத்தனை மணிக்கு நடந்தது ?’’
‘’பத்தரை மணி இருக்கும் சார் ‘’
‘’309 இவங்ககிட்டே ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதி வாங்கிக்க , எழுதி கொடுத்துட்டு போங்கம்மா தகவல் கிடைத்ததும் சொல்றோம் ‘’
‘’கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடியுங்க சார் ’’
‘’சரி சரி நீங்க போயி முதலில் பாங்கில் விவரம் சொல்லி உங்க கணக்கை
ஸ்டாப் பண்ணச்சொல்லுங்க ’’
‘’சொல்லிட்டேன் சார் , அப்ப நான் வரேன் சார் ‘’விடை பெர்றுக்கொண்டாள்
ஒரு வாரம் ஆனது – போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எந்த தகவலும் வராததால் ஸ்டேஷனுக்குப்போனாள் .
‘’ஏம்மா திருடியவனை அடையாளம் காட்ட முடியுமா ?’’
‘’முடியும் சார் ‘’
‘’207 அந்த பிக்பாக்கெட் பயலுவ நாலு பெயரையும் அழைச்சுகிட்டு வாய்யா ‘’
இன்ஸ்பெக்டெர் சொன்னார்
திரு திரு வென விழித்தபடியே வந்து நின்றனர் நாலுபேரும்
இன்ஸ்பெக்டர் ஒவ்வொருத்தன் அருகிலும் நின்று காட்டி இவனா பாருங்க
என்று கேட்டபடி சென்றார் ,
’’இவங்க யாரும் இல்லை சார் ’’
‘’ நல்லா பார்த்து சொல்லுங்க ,இவனுக தான் அந்த ஏரியாவில அடிக்கடி அடிச்சுட்டு இங்க வருவானுங்க ‘’
‘’இல்ல சார் எனக்கு அவனை நல்லா தெரியும் ,அவன் கழுத்துகிட்ட ஒரு நட்சத்திர குறி இருக்கும் சார் ‘’
‘’ஏண்டா உங்க குரூப்பிலே அப்படி எவனாச்சும் இருக்கானா?தெரிஞ்சா சொல்லுங்கடா ‘’திருடர்களைப்பார்த்து கேட்டார்
‘’இல்லேசார் அப்படி யாரும் கிடையாதுசார் ‘’
‘’சரிம்மா நீங்க போங்க ,அடையாளம் சொல்லிட்டீங்களே வாட்ச் பண்றோம் ‘’
எரிச்சலோடு போனாள் ருத்ரா .மன விரக்தி போக முகனூலில் அமர்ந்தாள்.
அதில் யாரோ ஒரு புது முகம் ஒன்று ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தார்கள்
நீண்ட யோசனைக்குப்பிறகு அக்சப்ட் செய்தாள் .பின் ஒரு அப்டேட் போட்டுவிட்டு வெளியேறினாள்
அடுத்த நாள் அந்த புது முகக்காரன் தன் ப்ரொஃப்யில் பிக்சரை அப்டேட் பண்ணியிருந்தான் .ருத்ரா வேண்டா வெறுப்பாக லைக் கொடுத்து விட்டு
மூட எண்ணுகையில்..அவள்புத்தியில் திடீரென பல்பு எரிந்தது .பட்த்தை உர்றுப்பார்த்தாள்,,ஆம் அவனேதான் ,,அன்று தன்னிடம் கைபையை அடித்த அவனேதான் .சட்டென்று அவனைப்பற்றீய விபரங்கள் கண்டு பிடித்து ஓடினாள் இன்ஸ்பெக்டரிடம் ,
வாரே வா அறை மணியில் அவன் இருப்பிடம் சென்று இன்ச்பெக்டர் அவனை பிடித்து இழுத்து வந்தனர் ., நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல் தானே ரிக்வெஸ்ட் கொடுத்து மாட்டிக்கொண்டான் , விசாரித்ததில் அந்த லாப்டாப்பும் வேறு ஒருவரிடம் திருடியது என்று
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் திருடுவதற்குக் கூட,,அடப்பாவிகளா’
ருத்ராவிற்கு atm கார்டும் கைக்கு வந்து சேர்ந்தது .

வெள்ளி, 10 ஜனவரி, 2014

--இன்றைய சினிமாவின் போக்கும் ,சமுக பாதிப்புகளும்

                                             தைப் பொங்கல் சிறப்பு கட்டுரை  --இன்றைய சினிமாவின் போக்கும் ,சமுக பாதிப்புகளும்
 இன்றைய  திரைப் படங்களில்  நல்ல கதை கிடையாது ,நல்ல கருத்து கிடையாது ,ஏன் பாடல்கள் ,வசனங்கள்  கிடையாது ,ஒரு தலைப்பு கூட கிடையாது ,,நகைச்சுவை  என்ற பெயரில் அடிக்கிற கூத்து களை  சொல்லவே  வேண்டாம் , இலை மறை காயாக  காட்டப்பட்ட விஷயங்கள் எல்லாம் அம்பலத்தில்  ஏறி  பார்ப்பவர்களை அருவருக்க வைக்கிறது,இன்று குடும்பத்தோடு  அமர்ந்து சினிமாவை பார்க்கமுடிவதில்லை ,
சினிமாவினால் ஏற்படும் பாதிப்புகள் ;;
இன்றைய சினிமாவின் தலைப்புகளே  வன்முறையை   தூண்டுவதாக உள்ளது ,பெயருக்குகூட பஞ்சம் ,குஸ்தி , தகராறு ,வீராப்பு , குத்து ,ரகளை , அடிதடி  இப்படி வைத்தால்...பாதிப்பு என்பது  உயிர்களோடு மட்டும் சம்பத்தப்பட்டது  அல்ல ,அது மிக நுட்பமான விஷயங்களோடும் சம்பந்தப்பட்டது ,இது போன்ற படங்கள்  எதிர் மறையான அதிர்வுகளை தந்து  இளைய தலை முறைகளை  வன்முறைக்கு    தூண்டுகிறது ,நல்ல விஷயங்களை சிதைத்து  சுயநலத்தை  வளர்க்கிறது . ,காதல் என்றால் பெற்றோர்களை  எதிர்த்து ,வீட்டைவிட்டு  ஓடுவதாக காட்டுகிறார்கள் ,காதல் திருமணத்தின்  பின் விளைவுகளை   சினிமாவில் காட்டுவதில்லை , எதற் கெடுத்தாலும்  அடிதடி ,வன்முறை  என்று காட்டுவதால் தங்களை தாங்களே ஹீரோவாக  காட்டிக்கொள்ள இளைஞர் கள்  அதைப்பார்த்து  அவர்களும்  வன்முறையில் ஈடு படுகிறார்கள்  இரட்டை அர்த்த  வசனங்களும், நாராசமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை  பழிக்குப் பழி , ,வெட்டு  கொலை என்று மாணவ சமுதாயமும்   கெட்டுப்போகின்றன ,ஆகவே  படைப்பாளிகளும் ,இயக்குனர்களும்  முழுமையான ஆரோக்கியமான படங்களைத் தரவேண்டும் ,மனித நேயப் பண்புகளையும் .பரந்த மனப்பான்மையையும்   கூடிய படங்களை உருவாக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம் ,, இன்றைய குழ்ந்தை கள் கூட   மனபாதிப்பு அடைகின்றனர் , பாதிப்புகள் நீங்க வேண்டுமானால்   வன்முறை காட்சிகளும் ,,ஆபாச காட்சிகளும்
நிறுத்தப்படவேண்டும் 

சனி, 4 ஜனவரி, 2014

இணையத்தின் சமூகப் பயன்பாடு


                        இணையத்தின்  சமூக பயன்பாடு

 இ ணையம் என்றால் இணைந்து என்று பொருள்  , இன்று சமூகத்தில்  இதன் பயன் பாடு  கல்வி, வணிகம்   இப்படி எத்தனையோ வடிவங்களில் பயன் தந்து கொண்டிருக்கிற்து  .தமிழில் உள்ள வளங்கள்  யாவும்  மின்வடிவில்  ்சேகரிக்கப்படுவதின்     மூலமாக  எதிர் கால  தலைமுறை யினருக்கு   ்தொண்டாற்றுகிறது , வணிக ரீதியாக  இணையத்தினை  பயன்படுத்தி  லாபம் ஈட்டமுடிகிறது .வீட்டிலிருந்தபடியே  மின் கட்டணம்  ரயில் ,பஸ் டிக்கெட்  ,செல்போன் சார்ஜ் பண்ண என்று எல்லாவற்றையும்  எளிதாக  செய்ய முடிகிறது , யார்  வேண்டுமானாலும்  இதில் எழுதலாம் . நாமே அதை வெளியிடலாம் ,அதற்கான விமர்சனங் களையும் பெறலாம்  இணையதளத்தில்   சமூக நிகழ்வுகள் 
இதில்  முக்கியப்படுத்தப்படுகிறது ,பிரபல எழுத்தாளர்களுடைய  படைப்புகளும்  இணையத்தில்  மின் நூல்களாக  கிடைக்கின்றன  மறந்து போன  ஏதோ  ஒரு வரியின்  ஒரு வாக்கியத்தை    விட்டால் கதை தொகுப்பையும் முன் நிறுத்தும்  இன்று அரசியல்  கட்சிகள்  தேர்தலுக்குக்கூட  இணையத்தை பிரச்சாரத்துக்கு  பயன் படுத்துகிறார்கள்  இது மட்டுமா ? எந்த கணக்கையும் எளிதாக போட்டு காண்பிக்கிறது  பாரன் ஹீட்டை செல்சியலில் ,மைல்களை  கிலோ மீட்டரில்  மாற்றிகொடுக்கிறது . எந்த    நாட்டின் கரன்சியையும்  இன்னொரு நாட்டின்  கரன்சி மதிப்பில் சொல்லித்தருகிறது ,எந்த ஊரின்  சீதோண   நிலையையும் சட்டென்று சொல்லும் , பார்சல்களின் பயண நிலையைக் கூட  இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ளமுடியும் . ஒரு சொல்லின் பொருளை,அதன் உச்சரிப்பை  சொல்லி கொடுக்கிறது .
இப்படியாக  இணையத்தின் பயன் பாட்டினால்  மக்களின்  நேரத்தையும் ,பணத்தியும்  மிச்சப்படுத்துகிறது   இணையத்தால்   வருங் காலத்தில் இன்னும் கூட  நிறைய பயன்பாடுகள்  கிடைக்கலாம் ,இணையமே உனக்கு நிகரில்லை  சமூகத்தில் உன் துணை ஒன்று போதும்  மனிதனுக்கு