சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை


🍀🍀🍀🌳🌳🌳🌳💮💮🍁💮💮🌼
கவிதை படைத்த
அனைவருக்கும் வாழ்த்துகள்
போட்டியின் நடுவராக பயணித்து
சிறப்பான பின்னுட்டம் கொடுத்த
உயர் திரு Kavignar Araஅவர்களுக்கு
தமிழ் சேவை குழுமத்தின் வாழ்த்துகள்..🌻
🌻💘💘💘🌺🍀🌼🌷
இதோ... வெற்றியாளர்கள்..
வெற்றி பெற்ற அனைவருக்கும்
தமிழ் சேவை குழுமத்தின் சார்பாக
வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்
இரட்டைக்கிளவி
பட படவென கண் இமைகள் அடித்து
பட்டுப்பூச்சியா வந்து கிச்சுக் கிச்சு மூட்டுகிறாய்
கொழு கொழு இடுப்புக்காரி நீ
வழு வழு ப்பு மேனிக்காரி வளைஞ்சு போகையிலே
நெஞ்சிலே சுளுக்கு வந்தது
சில்லு சில்லா நீ சிரிக்கும் சிரிப்பிலே
சிதறிப்போகுது என் மனசு
உன்னழகைப் பார்த்ததுமே
பொல பொலவென கவிதை கொட்டுது
குடு குடுன்னு வந்து நீயும்
தட தடன்னுபதில் சொல்லாமப் போகிறாய்
பர பரன்னு நான் இயங்குகிறேன் நீ
பிசு பிசுன்னு பிசினுமாதிரி இழுக்கிறாய்
குளு குளு என வாட்டுது உன் முகம்
தொள தொள என்று நானும் துவண்டுபோகிறேன்
தொணதொண என்றுஅறுப்பதால் உனக்கு கடுகடுப்பா
குறு குறு என்று பார்த்தது போதும்
சுறு சுறுஎன்று பதிலைச்சொல்லிடு பெண்ணே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக