எந்தன் உயிரே
எந்தன் உயிரே
உந்தன் எழிலில்
சிந்து படிப்பேன்
வந்து ரசிப்பாய்
உந்தன் எழிலில்
சிந்து படிப்பேன்
வந்து ரசிப்பாய்
நல்ல நெஞ்சமே
சில்லென்ற தென்றலே
வல்லவளே வந்து
நல்லருள் காட்டேன்
சில்லென்ற தென்றலே
வல்லவளே வந்து
நல்லருள் காட்டேன்
பாடும் குயிலே
ஆடும் மயிலே
சூடும் மலரே
மடியில் வருவாய்
ஆடும் மயிலே
சூடும் மலரே
மடியில் வருவாய்
எழிலாடும் நிலவே
விழி கவரும் விந்தையே
பொழியும் மழையாய்
பொழிந்திடு அன்பை
விழி கவரும் விந்தையே
பொழியும் மழையாய்
பொழிந்திடு அன்பை
காலை அழகே
சோலைப் பூவே
வேல் கண்ணால்
வீசிடு காதலை
சோலைப் பூவே
வேல் கண்ணால்
வீசிடு காதலை
உயிர்தான் நீள
உதவிடு பெண்ணே
பயிர் காக்கும்
மழையாய் வந்திடு
உதவிடு பெண்ணே
பயிர் காக்கும்
மழையாய் வந்திடு
இலக்கிய கவிதையே
இதயத்தில் ஆள்கின்றாய்
புவியோர் வாழ்த்த
பூமாலை சூடுவோம் வா
இதயத்தில் ஆள்கின்றாய்
புவியோர் வாழ்த்த
பூமாலை சூடுவோம் வா
மண்ணூறும் நீரே
விண்பூவாம் மீனே
நுண்கலை மேதையே
நான் சுழன்றேன் உனைப்பார்த்து
விண்பூவாம் மீனே
நுண்கலை மேதையே
நான் சுழன்றேன் உனைப்பார்த்து
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக