சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை

நட்பென்றால் நாம் என்போம்
நட்பெனும் நதியில்
நானும் அவளும்…
அந்நியம் அற்றவளாய் 
அண்மையில் உள்ளவளாய்
ஆபத்தில் உதவுபவளாய்
பாரபட்சம் இல்லாதவளாய்
எந்நலமே அவள் நலமாய்
என்றும் என்னை பாதுகாப்பவளாய்
நண்பனாய் நல்லாசிரியனாய்
என் வாழ்வுக்கு ஒளி தந்தவள்
என் துயருக்குத் தோள்கொடுத்தவள்
என் தாயைப்போல் மடி தந்தவள்
நட்பே உலகில் சிறந்த உறவு
நாளை உலகம் நமதென்போம் அதில்
நட்பென்றால் நாம் என்போம்
நட்பை கொண்டாடுவோம்
நலமாக வாழ்ந்திடுவோம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக