சனி, 29 செப்டம்பர், 2018

தமிழமுதுகவிச்சாரல்---ஜூலை 13

வாசல் தோறும் வேதனைகள் (சமூகம்)
வீட்டுக்கு வீடு வாசற்படி ஆனாலும்
வாசல்களில் வேதனைகள் வேறுபடும்
வேதனை இல்லா வாசல்கள் இல்லை 
சோதனை இல்லாமல் சாதனைகள் இல்லை
உலையில் போட அரிசி இருக்காது
கலைகள் கற்றும் காசாக்க முடியாது
கடனாளி ஆகாமல் வாழக் கற்றால்
கடக்கின்ற நொடிகளெல்லாம் சாதனைதான்
துணிவுடன் கூடி துயர்களைக் களைந்தால்
அணிகலன் ஆகும் அவரவர் வாழ்க்கை
தூங்கி அழியும் துயரெல்லாம் போகும்
ஏங்கி கிடக்காமல் தாங்கிப்பிடி உழைப்பை
அலைபாயும் உள்ளம் அனைவருக்கும் தொல்லை
மலை போன்ற துன்பத்தைத்தான் அது தரும்
நிலை குலையாமல் துயரத்தை எதிர் கொண்டால்
கலையாகும் வாழ்வு துன்பங்கள் தூளாகும்
விடியாத பொழுதும் விடிந்து விடும்
முடிந்திடா கவலைகளும் முழுதாய் மாறும்
குடிவாழ குலம்வாழ உழைப்பொன்றே விடிவு
மடிந்தொழிய வைக்கும் வாசல் தோறும் வேதனைகளை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக