சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை---3-9-18

புத்தம்புது பூமி வேண்டும்
புத்தம் புதிதாய் பூமி வேண்டும்
நித்தம் அதில் நிம்மதி வேண்டும்
சத்தம் இல்லா அமைதி வேண்டும்
யுத்தம் இல்லா பூமி வேண்டும்
ஊழல். இல்லா பூமி வேண்டும்
சூழல் எல்லாம் சுகப்பட வேண்டும்
இல்லாமை கொடுமை மடிந்திட வேண்டும்
இருப்போருக்கு எல்லாம் இரக்கம் வேண்டும்
வறுமை நீங்கி வளமை வேண்டும்
பொறுமை குணம் மேலோங்க வேண்டும்
சிறுமை இல்லா சிந்தனை வேண்டும்
அருமையான தலைவன் அரசாள வேண்டும்
அளவான மழை பெய்தல் வேண்டும்
வளமாய் வயல்கள் செழிக்க வேண்டும்
குளம் ஏரிகள் தூர்வார வேண்டும்
குழந்தை தொழிலாளி முறையொழிய வேண்டும்
நியாயம் தர்மம் நிலைக்க வேண்டும்
நிலையில்லா அரசு நீங்க வேண்டும்
குறைகள் இல்லா அரசு வேண்டும்
முறையாய் பூமி சுற்ற வேண்டும்
நடந்தவை மறக்க மனம் வேண்டும்
நடப்பவை நல்லதாக ஆக வேண்டும்
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்
ஏற்றத்தாழ்வு இல்லாத பூமி வேண்டும்
இயற்கையை காக்கும் மனிதம் வேண்டும்
இறைவன் அந்த வரத்தைத்தர வேண்டும்
புத்தம் புதிதாய் பூமி விளங்க
சித்தம் நிலைப்பாட்டுடன் சிவனை வேண்டுவோம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக