முத்துக்கமலம் 15-6--2018
கவிதை
தாய் உணரும் சங்கீதம்
அன்பாலே தொட்டில் கட்டி
அழகே உனை அதில் இட்டு
ஆசையோடு உரைத்தேன் தாலாட்டு
அழகே உனை அதில் இட்டு
ஆசையோடு உரைத்தேன் தாலாட்டு
தாலாட்டும் தமிழ் பாட்டும்
தாய் வழி வந்த சொத்தாச்சே
சிங்கமாய் நீ வளர்ந்து முழங்குவாய்
சங்கம் வளர்த்த தமிழை அமுத வாயால்
தாய் வழி வந்த சொத்தாச்சே
சிங்கமாய் நீ வளர்ந்து முழங்குவாய்
சங்கம் வளர்த்த தமிழை அமுத வாயால்
நீ வந்த பின்னால்தான்
என் பெயர் விளங்குது தாயென்று
சீராட்டும் தாலாட்டும் கேட்டு
சீராக நீ வளர்வாய் சீராளனே
என் பெயர் விளங்குது தாயென்று
சீராட்டும் தாலாட்டும் கேட்டு
சீராக நீ வளர்வாய் சீராளனே
உன்சந்தன மேனியும்
உன் சாஞ்ச நடையழகும்
சிந்தையை அள்ளும்
காலில் இட்ட கொலுசுச் சத்தம்
உன் சாஞ்ச நடையழகும்
சிந்தையை அள்ளும்
காலில் இட்ட கொலுசுச் சத்தம்
வீணையை மிஞ்சும்
மார்பு முட்ட நீ
பாலுண்ணும் சத்தம்தானே
தாய் உணரும் சங்கீதம்
மார்பு முட்ட நீ
பாலுண்ணும் சத்தம்தானே
தாய் உணரும் சங்கீதம்
- சரஸ்வதி ராசேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக