சனி, 29 செப்டம்பர், 2018

தமிழ்ச்சேவை

மரணம் விடு தூது
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்/
அதனை உணர்ந்தால் தொல்லைகள் இல்லை/
எக்கணமும் எந்நேரமும் எக்காலமும் நீ/
தக்கவாறே சாலைவிதிகள் கடைபிடித்துவிடு/
வாரி அணைக்கும் அன்பானகுடும்பம் இருக்க /
லாரியில் அடிபட்டு சாவது எத்தனை கொடுமை /
சட்டத்தை மதிக்காமல் சாலையில் போனாலே /
சட்டத்தில் நீயும் படமாய் தொங்கணும்ஒரு நாளே /
வாழும் வாழ்க்கை ஒரு முறைதான் அதை /
வாழ்ந்து முடித்திடு முறையோடுதான் /
சுவரில்லா சித்திரமாய் ஆகிவிடாதே அது /
சுவையில்லா பண்டமாய் ஆகிவிடும் குடும்பத்துக்கு /
வாகனத்தில் போகும்போது கைபேசி அணைத்துவிடு /
விரைந்து வரும் வண்டிக்கு வழிவிடுசாவை முந்தாதே /
சாலை விதியை கடை பிடிக்காமல் மீறி மரண /
ஓலைக்குத் தூது விட்டுசாலையில் நிறுத்தாதே குடும்பத்தை /
சுற்றியுள்ள சாலை விதிகளே சூழுலகை காக்கும் /
வெற்றிடமாய் போகிடாதே வேகத்தை கட்டுப்படுத்து /
தலைக்கவசமே உயிர்க் கவசமாகும் தலையில் மாட்டு /
தப்பாது விதிகளைக்கடைப்பிடித்து நண்பனுக்கும்வழி காட்டு /
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக