சனி, 29 செப்டம்பர், 2018

கவியுலகப்பூஞ்சோலை --25-5-18

எஞ்சியது எது ?
வாலி சான்றிதழ்—7
மாதம் மும்மாரி மழை பெய்தது அன்று
முப்போக சாகுபடி செய்தான் விவசாயி
பயிர்களுக்கு தண்ணீர் இல்லை இன்று
உயிர்வாழ வழியின்றி கண்ணீர்விடும் நிலை
மண்ணுக்குள் விதை விதைத்த விவசாயி இன்று
தன்னையே விதைத்துக் கொள்கிறான் மண்ணுக்குள்
மும்முனை மின்சாரமும் முரணாகிபோச்சு
வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை
விதைத்த விதையை விளைவிக்கமுடியவில்லை
வாடினோம் வறுமையில் வதைபட்டோம் வாழ்வில்
வானம் பார்த்த பூமியில் வானுயர்ந்த கட்டிடங்கள்
உழவன் என்ற பெயர் போய் சித்தாளானான்
விளிம்பில் இருக்கும் விவசாயத்தைகட்டியிழுக்க
வீரியமுள்ள அரசாங்கம் முளைக்கவேண்டும்
இதில் விவசாயிக்கு எஞ்சியது என்ன
வாய்க்கரிசியே மிஞ்சியது
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக