சனி, 29 செப்டம்பர், 2018

மணிகண்டன் கவிதை

சபரி மலையிலேமணிகண்டன் சந்நிதானம்
பந்தள வேந்தரின் புண்ணிய செல்வன்
பம்பையின் பாலகன் பால்முக வடிவினன்
கண்ணனுக்கும் சிவனுக்கும் பாலகனாய்
கருணை வடிவமாக வந்துதித்தவன்
பம்பையிலே தலைமுழுகி பாவங்கள் அதில் கழுவி
பதினெட்டுப் படியேறி பக்கத்துக்கொரு காய் உடைத்து
பந்தள ராசனை மணி கண்ட யோகியை வணங்கி
பக்தியுடன் வேண்டினால் முக்தியும் கிடைத்திடும்
வில்லாளி வீரன் வில்லெடுத்துத் தனைத்தடுத்த
வில்லி மகிசியை வதம் செய்த கலியுகவரதன்
சங்கடங்கள் தீர்த்திடும் சபரிமலை எருமேலியவன்
சரணாகதி அடைந்தோருக்கு காட்சி தருபவன்
அய்யனின் நீலிமலை அமர்ந்திருப்பான்
புலிமேலே
அய்யனவன் சாஸ்தாவை அடி பணிவோம் நாளும்
வன்புலிமேல் அமர்ந்தவன் வாவர் சுவாமி தோழனவன்
இன்னல்கள் தீர்த்துவைப்பான் இனபேதமில்லாமல்
பொய்யுலகு விட்டு மெய்யுலகு சேர்ந்திட
நெய் அபிடேகம் செய்து அய்யன் பாதம் தொழுவோம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக