கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் /22-23/05/2018ம் நாள் நடத்திய காதல் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு காதல்கவிமணி
சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் . Nirmala Sivarajasingam
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் /22-23/05/2018ம் நாள் நடத்திய காதல் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு காதல்கவிமணி
சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் . Nirmala Sivarajasingam
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
கண்ணெதிரே தோன்றினாள்///
வண்ணப் பெண்ணின் வனப்பைக் கண்டு
வண்டாய் ஆனேன் தேன்துளி அருந்த
கண்ணின் மணியே கன்னியுன் நினைவில்
எண்ணம் கொண்டேன் எழிலார் அழகி
வண்டாய் ஆனேன் தேன்துளி அருந்த
கண்ணின் மணியே கன்னியுன் நினைவில்
எண்ணம் கொண்டேன் எழிலார் அழகி
அழகி அவளின் மொழியில் மயங்கி
தழுவும் கொடியாய்ப் படர்ந்தேன் முயங்கி
கழுவும் நீரில் நழுவும் மீனாய்
வீழ்ந்தே மறைகிறாய் கடல்மறை கதிராய்
தழுவும் கொடியாய்ப் படர்ந்தேன் முயங்கி
கழுவும் நீரில் நழுவும் மீனாய்
வீழ்ந்தே மறைகிறாய் கடல்மறை கதிராய்
கதிரைக் கண்டால் மலர்வேன் தாமரையாய்
குதித்தேவந்து மனஇருள் போக்கிடுபெண்ணே
அதிதுயர் நெருப்பேற்றி விட்டாய் காதலால்
அதிகம் அகவை ஆகுமுன்னே மனதைக்காட்டு
குதித்தேவந்து மனஇருள் போக்கிடுபெண்ணே
அதிதுயர் நெருப்பேற்றி விட்டாய் காதலால்
அதிகம் அகவை ஆகுமுன்னே மனதைக்காட்டு
காட்டும் அன்பில் கருணை வேண்டும்
கொட்டும் அனலில் விலகியே நிற்கிறேன்
மீட்டும் வீணையில் மீளும் மனமே
எட்டும் தூரத்தில் வந்துவிடு வெண்ணிலவே
கொட்டும் அனலில் விலகியே நிற்கிறேன்
மீட்டும் வீணையில் மீளும் மனமே
எட்டும் தூரத்தில் வந்துவிடு வெண்ணிலவே
வெண்ணிலவே விண்ணை விட்டு இறங்கிடு
கண்ணெதிரே தோன்றி கனிவான முகம்காட்டு
மண்ணிலே நான்வாழ மனதைக் கொடு
எண்ணமெலாம் உன் பதிலுக்காய் ஏங்கி
கண்ணெதிரே தோன்றி கனிவான முகம்காட்டு
மண்ணிலே நான்வாழ மனதைக் கொடு
எண்ணமெலாம் உன் பதிலுக்காய் ஏங்கி
ஏங்கித் தவித்திடும் உள்ளம் எனதே
ஒங்கி உரைப்பாய் உந்தன் பதிலை
தேங்கிக் கிடக்கும் குப்பையைப் போலே
மங்கிமக்கி நாற்றம் எடுக்கவிடாதே வாழ்வை
ஒங்கி உரைப்பாய் உந்தன் பதிலை
தேங்கிக் கிடக்கும் குப்பையைப் போலே
மங்கிமக்கி நாற்றம் எடுக்கவிடாதே வாழ்வை
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக