சனி, 29 செப்டம்பர், 2018

இலக்கியப்பூந்தோட்டம்---6-8-18

ராசாத்தி மனசுல
ராசாவே உன் நினைப்புதான்
ராசாத்தி என் மனசுலே
போகாதே ராசாவே தூரமாய்
தாங்காது மனசு பாரமே
ராசாவே உனைக் காணாது
ரோசாப்பூ தினம் வாடுது
மனசால் உனை நினச்சுட்டேன்
மகராசன் நீவேண்டுமென்று
மாராப்பு சேலைக்குள்ளே என்
மனசு நிக்கலை ராசாவே
வாசமல்லி தலையில் வச்சேன்
வாட்டம் பட்டு வதங்கிடுச்சு
விரசாக வந்திடு இல்லைன்னா
சிரசே வெடிச்சிடும் ஆமா
ராசாவே பந்தல் நட்டு
ரோசாப்பூ மாலை கட்டு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக